
புதுச்சேரி:
நடிகர் விஜயின் த.வெ.க. கட்சியின் ஆண்டு விழா நாளை மகாபலிபுரத்தில் நடைபெற உள்ளது.
இதில் பங்கேற்க புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. இதற்குப் பிறகு, முதலமைச்சர் ரங்கசாமி த.வெ.க. ஆண்டு விழாவில் பங்கேற்க வாய்ப்பு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி சட்டசபையில், நிருபர்கள் முதலமைச்சர் ரங்கசாமியிடம் த.வெ.க. கட்சியின் ஆண்டு விழாவில் பங்கேற்கிறீர்களா? எனக் கேட்டபோது, அவர்கள் மாநாடு நடத்துகிறார்கள், எனக் கூறி, த.வெ.க. கட்சியின் மாநாடு சிறக்க வாழ்த்து தெரிவித்தார்.
இதன் மூலம், த.வெ.க. ஆண்டு விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி பங்கேற்க மாட்டார் என்பது தெளிவாகிறது.


