டெல்லியில் கடும் பனிமூட்டம் காரணமான விமானம், ரெயில் சேவைகள் பாதிப்பு!

Advertisements

புதுடெல்லி:

டெல்லியில் கடந்த சில நாட்களாகவே கடுமையான பனிமூட்டம் நிலவுகிறது. இதன் காரணமாக விமான சேவைகள் மற்றும் ரெயில் சேவைகள் பாதிக்கப்படுகின்றன. இதனால் விமான பயணிகள் மற்றும் ரெயில் பயணிகள் கடந்த சில நாட்களாகவே கடும் கவதி அடைந்து வருகிறார்கள்.

அடர்ந்த பனிமூட்டம் காரணமாக டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று விமான சேவை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. நேற்று 48 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

564 விமானங்கள் தாமதமாக வந்து தரையிறங்கின. மேலும் 95 ரெயில்களும் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளானார்கள்.

இந்த நிலையில் டெல்லியில் இன்றும் கடும் பனி மூட்டம் நீடித்தது. இதன் காரணமாக இன்றும் விமான சேவைகள் மற்றும் ரெயில் சேவைகள் பாதிக் கப்பட்டுள்ளன.

இன்று காலை 10 மணிவரை டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் 7 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும் 150-க்கும் மேற்பட்ட விமானங்கள் சுமார் 20 நிமிடங்கள் தாமதமாக டெல்லிக்கு வந்தன.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *