மத்திய அரசை வலியுறுத்தி தொழிலாளர்கள் போராட்டம்.!

Advertisements

அரக்கோணத்தில் தொழிலாளர்களுக்கு விரோதமான 4-சட்ட தொகுப்பை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தி, சாலை மறியலில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினரை, காவல்துறையினர் கைது செய்தனர்.

இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பழனி பட்டை பகுதியில், இந்திய தொழிற்சங்கத்தினர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர், மற்றும் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ரயில் மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால், உடனே அனைவரும் சாலை மறியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, மத்திய அரசு கொண்டுவந்துள்ள தொழிலாளர்களுக்கு விரோதமான நான்கு சட்ட தொகுப்பினை திரும்பப் பெற வேண்டும், விவசாய பொருட்களுக்கு கட்டுப்படியான விலை வழங்க வேண்டும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். சாலை மறியலில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டோரை, காவல்துறையினர் கைது செய்தனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *