ரஷியா மீது உக்ரைன் உக்கிரமான டிரோன் தாக்குதல்..!

ரஷியா மீது, உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியதில் 12 பேர் உயிரிழந்தனர் 39 பேர் படுகாயமடைந்தனர்.

உக்ரைன் , ரஷியா போர் 4 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகின்றன. போர் நிறுத்த முயற்சிகளை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மேற்கொண்டார். ஆனால் முயற்சி தோல்வியடைந்த நிலையில் போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ரஷியாவின் தத்தாரிஸ்தான் மாகாணம் நிஸ்னேகாம்ஸ்க் நகரத்தில் உள்ள குடியிருப்புகள் மீது, உக்ரைன் இன்று டிரோன் தாக்குதல் நடத்தியது. இந்த டிரோன் தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தனர். மேலும், 39 பேர் படுகாயமடைந்தனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *