
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே தீ விபத்தில் பாதிக்கப்பட்ட இருளர் குடும்பங்களை சட்டமன்ற உறுப்பினர் தமிமுன்அன்சாரி நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்ததுடன், நிவாரணம் வழங்கினார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புவனகிரி அடுத்த ஆதிவராகநல்லூர், பாரேகான், தைக்கால், மே.பேட்டை பகுதிகளில் வசிக்கும் இருளர் இன மக்களின் 16 குடிசை வீடுகள் முற்றிலும் எரிந்து சாம்பலானது. இது குறித்து தகவல் அறிந்த கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க.செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவுறுத்தலின் படியும், கடலூர் கிழக்கு மாவட்ட திமுக பொருளாளர் என்.ஆர்.கே.பி.கதிரவன் வழிகாட்டுதலின்படியும், மனித நேய ஜனநாயக கட்சி தலைவரும் சிதம்பரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமாகிய மு.தமிமுன் அன்சாரி, மற்றும் பரங்கிப்பேட்டை மேற்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் மருத்துவர் மனோகர் ஆகியோர், தீ விபத்தில் வீடுகள் மற்றும் உடமைகளை இழந்த குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து, மேற்கு ஒன்றிய செயலாளர் மருத்துவர் மனோகர் ஏற்பாட்டில் முதல் கட்டமாக ஆடைகள் வழங்கினார். நிகழ்ச்சியில், பரங்கிப்பேட்டை மேற்கு ஒன்றிய தி.மு.க.நிர்வாகிகள் மற்றும் மனிதநேய ஜனநாயக கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.



