Tourist bus Accident: சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து!

Advertisements

ஒகேனக்கல் மலைப்பகுதியில் தமிழக சுற்றுலா பேருந்து  கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அரசு மருத்துவர் உட்பட 7 பேர் படுகாயம் அடைத்தனர்.

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் வட்டம் கோண்டூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் மருத்துவர் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் குடும்பத்துடன் 51 பேர் இன்று காலை சுற்றுலா பேருந்தில் தருமபுரி மாவட்டத்தில்யுள்ள  ஒகேனக்கலுக்கு  சுற்றுலாசென்றனர். இந்நிலையில்  பேருந்தை விழுப்புரம் மாவட்டத்தைச்  சேர்ந்த ஸ்ரீதர் மகன் ஸ்ரீநாத் வயது 22 என்பவர் இயக்கி வந்துள்ளார்.

ஒகேனக்கல் வனச் சாலையில் பத்தாவது கிலோ மீட்டரில் பேருந்து நிறுத்த முயன்ற போது பிரேக் பிடிக்காததால் பேருந்து டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. இதை அறிந்து ஓட்டுநர் சாலையின் இடது புறமும், வலது புறமாக இயக்கி வேகத்தை கட்டுப்படுத்தி உள்ளார். இருப்பினும் பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து  ஒகேனக்கல் ஆஞ்சநேயர் கோயில் கணவாய் வளைவு பகுதியில் மேட்டில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

தகவல் அறிந்து உடனடியாக டிஎஸ்பி மகாலட்சுமி இன்ஸ்பெக்டர் சுரேஷ் குமார், முத்தமிழ்செல்வன் சம்பவ இடத்துக்கு வந்தனர். விபத்தில்  சிக்கிய அரசு மருத்துவர் ஜான்சி வயது 32,  மதன் வயது 25 உட்பட 7பேர் படுகாயம் மற்றும் 20க்கும் மோற்படோருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

அவர்களை மீட்டு   உடனடியாக  பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அதன்பின்னர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரச மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் பென்னாகரம் ஒகேனக்கல் செல்லும் சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *