
புதுடில்லி:
உலகின் டாப் 100 தொழிலதிபர்கள் பட்டியல் வெளியாகி உள்ளது. அதில் முகேஷ் அம்பானி உள்ளிட்ட 7 இந்தியர்கள் இடம் பிடித்துள்ளனர்.
தற்போது வணிகத்தில் யார் அதிகம் ஆதிக்கம் செலுத்தி வருகிறார் என்ற அடிப்படையில் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதில் ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி 12வது இடத்தைப் பிடித்துள்ளார். இந்தப் பட்டியலில் இந்தியர்கள், இந்திய வம்சாவளியினர் மேலும் 6 பேர் இடம் பெற்றுள்ளனர்.
#மைக்ரோசாப்டின் சத்யா நாதெல்லா 3வது இடத்தைப் பிடித்துள்ளார்.
#கூகுளின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை 10வது இடத்தைப் பிடித்தள்ளார்.
#அடோப் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி சாந்தனு நாராயண் 52வது இடத்தைப் பிடித்துள்ளார்.
#யூடியூப் தலைமை நிர்வாக அதிகாரி நீல் மோகன் 69வது இடத்தைப் பிடித்துள்ளார்.
#கோஸ்லா வென்ச்சர்ஸின் நிறுவனர் வினோத் கோஸ்லா 74வது இடத்தைப் பிடித்துள்ளார்.
#ஐஸ் லிப்ஸ் பேஸ் நிறுவன சி.இ.ஓ., தரங் அமின் 94வது இடத்தைப் பிடித்துள்ளார்.


