
இந்த வாரத்தின் முதல் நாளான இன்று (பிப்ரவரி 17) இந்திய பங்குச்சந்தை குறைந்த அளவிலான வர்த்தகத்துடன் ஆரம்பமாகியுள்ளது.
மும்பை பங்குச் சந்தையின் குறியீடு சென்செக்ஸ் 400 புள்ளிகள் குறைவாகத் தொடங்கியுள்ளது. ஆரம்ப நிலவரப்படி, சென்செக்ஸ் 75,468 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது.
தேசிய பங்குச் சந்தையின் குறியீடு நிஃப்டி 22,800 புள்ளிகளுக்குக் கீழே வர்த்தகம் தொடங்கியுள்ளது.
இந்திய பங்குச்சந்தைகள் 9வது நாளாக வீழ்ச்சியுடன் தொடங்குவதால் முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச பொருளாதார நிலைமை மோசமாக இருப்பதால், கடந்த இரண்டு வாரங்களில் பங்குச்சந்தைகள் 2.5 சதவிகிதம் வரை குறைந்துள்ளது.
