today rasipalan:இன்றைய ராசிபலன் – 20.08.2024

Advertisements

மேஷம்


தம்பதிகளிடத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வாகனம் ஓட்டும் போது கவனமுடன் இருப்பது நல்லது. புதிய நண்பர்கள் கிடைப்பர். உத்யோகத்தில் வேலை பளு அதிகம் இருக்கும். கலைஞர்கள் தங்கள் படங்களில் வெற்றி காண்பார்கள்.

அதிர்ஷ்ட நிறம் : ஊதா

ரிஷபம்


தாய் அன்பு மிக்கவர் நீங்கள். பிள்ளைகளின் புது முயற்சிகளை ஆதரிப்பீர்கள். பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகு முறையால் தீர்வு காண்பீர்கள். ஆரோக்கியத்தில் பிரச்சினை இல்லை. புதிய வியாபாரத்தில் முதலீடு செய்வீர்கள். பணவரவு நன்றாக இருக்கும். இரு சக்கர வாகனம் ஓட்டும் போது வேகத்தை குறைப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

மிதுனம்


திருவாதிரை நட்சத்திரக்காரர்கள் கவனமுடன் இருக்க வேண்டும். காரணம் இன்று தங்களுக்கு சந்திராஷ்டமம். மேலும், தாங்கள் புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. இன்று மிருகசீரிஷம் மற்றும் புனர்பூசம் நட்சத்திரக்காரர்கள் தங்களுடைய அனைத்துவிதமான காரியங்களை துவங்கலாம்.

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

கடகம்


வியாபாரிகளுக்கு புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பர். எதிரிகள் விலகிப் போவர். தக்க சமயத்தில் நண்பர்கள் உதவுவர். நட்பால் ஆதாயம் உண்டு. இரவு நேர பயணத்தை தவிர்க்கவும். தொழில் அதிபர்கள் தம்பதிகள் தங்கள் வருவாயினை பெருக்க திட்டமிடுவர். உடல் நலம் சிறப்பாகும்.

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

சிம்மம்


பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். உத்யோகத்தில் அமைதி நிலவும். பணப் பிரச்சினை இருக்காது. வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். முன்கோபத்தினை தவிர்ப்பது நல்லது. வியாபாரிகள் புதிய கிளைகளை துவங்குவர். தியானம் மேற்கொள்வது டென்ஷனை குறைத்து, உடல் பொலிவினைக் கூட்டும்

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

கன்னி


பெண்கள் தங்கள் குடும்ப விசயத்தை வெளியிடாமல் இருப்பது நல்லது. தேக ஆரோக்கியம் நன்கு இருக்கும். மருந்து மாத்திரைகளை குறைத்து விடுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துப் போங்கள். தங்கள் காதலை வெளிப்படுத்த ஏற்ற காலம். குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வந்து போகும்.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

துலாம்


அரசியல்வாதிகளின் எண்ணம் ஈடேறும். ஒரு சிலருக்கு பெரிய பொறுப்புகள் கிடைக்கும். எதிர்பார்த்த நபரை சந்திப்பீர்கள். உத்யோகஸ்தர்கள் மேலதிகாரிகளிடம் நற்பெயரைப் பெறுவர். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். கூட்டு சில சமயம் தங்கள் பேச்சில் முதிர்ச்சி தெரியும். உடல் நலத்தில் அதிக கவனம் செலுத்துவது நல்லது.

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

விருச்சிகம்


பணப்பற்றாக்குறை நீங்கும். பணம் தாராளமாக வர ஆரம்பிக்கும். புதிய தொழில் துவங்குவர். பெண்களுக்கு ஆடை, ஆபரணம் சேரும். பெரிய மனிதர்கள் ஆதரவு கிடைக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். குடும்பத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் மிகும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

தனுசு


மணமாகாதவர்களுக்கு எதிர்பார்த்தவாரே துணை தேடி வரும். முகத் தோற்றம் பளிச்சிடும். அதிக விற்பனைக்காக வியாபாரத்தை துவங்க புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். மாணவர்களுக்கு நினைவாற்றல் கூடும். தம்பதிகளிடையே மனஸ்தாபம் நேரலாம்,

அதிர்ஷ்ட நிறம் : ரோஸ்

மகரம்


வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். பிள்ளைகளால் ஆறுதலடைவீர்கள். மாணவர்கள் வேற்று மொழியினைக் கற்க ஆர்வம் கொள்வர். வரவேண்டிய பாக்கிகள் வந்து சேரும். உத்யோகத்தில் அதிகாரியின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். உடன் பிறந்தவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

கும்பம்


விரும்பியவரை தேடிச்சென்று சந்திப்பீர்கள். வழக்கு சம்பந்தமான இழுபறிகள் நீங்கி நல்ல முடிவுகள் ஏற்படும். உடல் நலம் பலம் பெறும். வியாபாரிகளிடையே இருந்த மனக்கசப்பு நீங்கும். உத்யோகத்தில் மதிப்புக் கூடும் . மனைவிவழியில் உதவிகள் உண்டு. தாய்வழி உறவினர்களால் ஆதாயமடைவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் : கிரே

மீனம்


உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வரவுக்கு ஏற்ற செலவுகள் இருக்கும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகள் நன்கு படிப்பர். திட்டமிடாத செலவுகளை போராடி சமாளிப்பீர்கள். மாணவர்கள் கேள்விகளுக்கான விடையை நினைவில் வைக்க எழுதிப் பார்ப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *