today rasipalan:இன்றைய ராசிபலன்-07-08-2024

Advertisements

மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு உகந்த நாளாக இருக்காது. பணியிடத்தில் பணிகளை உறுதியுடன் மேற்கொள்ள வேண்டும். துணையை சமாதானம் படுத்துவதை கடினமாக உணர்வீர்கள். தேவையற்ற விஷயங்கள்பற்றிப் பேசுவதை தவிர்க்க வேண்டும். அதிக செலவுகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் செரிமானம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு சாதகமான நாளாக இருக்காது. முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். சில சௌகரியங்களை விட்டுக்கொடுக்க வேண்டும். பணியிடத்தில் பணிகளைக் கவனமாகச் செய்ய வேண்டும். துணையுடன் உணர்ச்சிவசப்பட்டு பேசுவீர்கள்.அதிக செலவுகள் ஏற்படலாம். நீங்கள் எந்த விஷயத்தையும் லேசாக எடுத்துக்கொள்வதன் மூலம் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கிறது. பணியிடத்தில் உங்கள் திறமையைக் கண்டு மேலதிகாரிகள் பாராட்டுவார்கள். துணையுடன் மகிழ்ச்சியான தருணங்களைப் பகிர்ந்து கொள்வீர்கள். பணவரவு அதிகமாக இருக்கும். இதனால் உங்கள் சேமிப்பு உயரும். ஆரோக்கியம்சிறப்பாக இருக்கும்.

கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு சுமூகமான நாளாக இருக்காது. ஆன்மீக செயல்களில் ஈடுபடுவது நல்ல ஆறுதலை தரும். பணியிடச் சூழல் உங்களுக்குச் சாதகமாக இருக்காது. பணியிடத்தில் அதிக பணிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். நீங்கள் தேவையற்ற பொறுப்புகளை ஏற்க வேண்டியிருக்கும். இதனால் அதிக செலவுகள் ஏற்படக்கூடும். மேலும், தந்தையின் உடல் நலத்திற்காகச் செலவு செய்ய நேரிடும்.

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு சுமாரான நாளாக இருக்கிறது.நீங்கள் சில சௌகரியங்களை விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கும். பணியிடத்தில் பதட்டமான சூழ்நிலை நிலவும். துணையுடன் சோகமான மனநிலையை வெளிப்படுத்துவீர்கள். வரவும் செலவும் இணைந்து காணப்படும். மேலும், தேவையற்ற விஷயங்களுக்காகப் பணத்தை செலவு செய்ய நேரிடும். ஆரோக்கியத்தில் கால் வலி மற்றும் முதுகு வலி ஏற்பட வாய்ப்புள்ளது.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு மிதமான பலன்கள் கிடைக்கும் நாளாக இருக்கிறது. நீங்கள் கடினமான சூழ்நிலையைச் சந்திக்க நேரிடும். ஆன்மீக செயல்கள் நல்ல பலனை அளிக்கும். பணியிடத்தில் அதிக பணிச்சுமை இருக்கும். துணையுடன் வீண் விவாதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. மருத்துவ செலவுகள் ஏற்படக்கூடும. ஆரோக்கியத்தில் தலைவலி ஏற்படலாம்.

துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு முன்னேற்றமான நாளாக இருக்கிறது. பயனுள்ள முடிவுகளை எடுக்க இந்தப் பயன்படுத்தி கொள்ளலாம். பணியிடத்தில் பணிகளைக் குறித்த நேரத்தில் செய்து முடித்து வெற்றி பெறுவீர்கள். துணையுடன் வெளியிடங்களுக்கு சென்று நல்ல புரிந்துணர்வை ஏற்படுத்திக் கொள்வீர்கள். அதிக பணவரவு கிடைக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

விருச்சிகம்


விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு சிறப்பான நாளாக இருக்கிறது. வளர்ச்சி காணப்படும். முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள். பணியிடத்தில் பணிகளைத் திறமையாகச் செய்து முடிப்பீர்கள். துணையுடன் நல்ல புரிந்துணர்வு காணப்படும். சொத்து அல்லது கடன்மூலம் பண வரவு ஏற்படும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு சுமாரான நாளாக இருக்கிறது. பணியிடத்தில் பணியில்தவறுகள் நேர வாய்ப்புள்ளதால் கவனமாகப் பணியாற்ற வேண்டும். துணையுடன் அகந்தை போக்கை வெளிப்படுத்துவீர்கள். பணப்பற்றாக்குறை காணப்படும். இதனால் சிறிய அளவில் கடன் வாங்க நேரிடலாம். ஆரோக்கியத்தில் கால்களில் வலி ஏற்பட வாய்ப்புள்ளது.

மகரம்


மகரம் ராசிக்காரர்களுக்கு உகந்த நாளாக இருக்காது. பிரார்த்தனையில் ஈடுபடுவதன் நல்ல பலன்களைப் பெறலாம். பணியிடத்தில் பதட்டமான சூழ்நிலை நிலவும். துணையுடன் மன அழுத்தத்தில் இருப்பதை வெளிப்படுத்துவீர்கள். பண இழப்பிற்கான வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தில் முதுகு வலி மற்றும் தலை வலி ஏற்பட வாய்ப்புள்ளது.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு சாதகமான நாளாக இருக்கிறது. பணியிடத்தில் நல்ல வளர்ச்சி காணப்படும். கடினமான பணிகளையும் எளிதாகச் செய்து முடித்து மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். துணையுடன் நேர்மையாக நடந்து கொள்வீர்கள். ஊக்கத் தொகை மற்றும் சலுகை வகையில் பணவரவு கிடைக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கிறது.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கிறது. பணியிடத்தில் உங்களுக்குச் சாதகமான சூழ்நிலை நிலவும். சக பணியாளர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். துணையிடம் நகைச்சுவை உணர்வைப் பகிர்ந்து மகிழ்ச்சியாக இருப்பீர்கள். போதுமான அளவில் பணப்புழக்கம் இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *