
மேஷம்

புது இடத்திற்கு கடையை மாற்றத் திட்டமிடுவீர்கள். பண வரவுக்குக் குறைவில்லை. பழைய நண்பரைச் சந்திப்பீர்கள். கலைஞர்களுக்கு முன் பணம் கிடைக்கும். வியாபாரிகள் வியாபாரத்தில் சில தந்திரங்களைக் கற்றுக் கொள்வீர்கள். அரசியல்வாதிகளுக்கு முக்கிய பொறுப்பு கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
ரிஷபம்

தேகம் பொலிவு பெறும். மாணவர்கள் ஆடம்பரச் செலவுகளைத் தவிர்க்கப் பாருங்கள். வெளிநாட்டில் வசிக்கும் பிள்ளைகள் தங்களின் பொருளாதாரத் தேவையைப் பூர்த்திசெய்வார்கள். நல்ல வேலைக்காகக் காத்திருப்பவர்களுக்கு புது உத்யோக வாய்ப்பு வரும். சில்லரை வியாபாரம் லாபம் தரும். குறுகிய தூர பயணங்கள் நன்மையைத் தரும்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
மிதுனம்

வியாபாரிகள் வெளியூர் பயணம் மேற்கொள்வர். நண்பர்களின் பக்கபலம் உண்டு. அலுவலக வேலைகளை விரைவாக முடிப்பீர்கள். வங்கிப் பணியாளர்கள் நிம்மதியடைவர். மளிகை வியாபாரிகளுக்கு அதிகமான லாபம் கிடைக்கும். உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
கடகம்

அலைச்சல் அதிகரிக்கும். திடீர் பணவரவு உண்டு. வியாபாரத்தில் ஆதாயம் காணலாம். மனைவியிடம் ஆத்திரப்படாதீர்கள். பொறுமையை கையாள்வது நன்மையைத் தரும். மாணவர்களுக்குத் தாங்கள் நினைத்த கல்லூரிகளில் சேருவதற்கு வழிகிடைக்கும். கடனின் வட்டித்தொகையை அடைத்து விடுவீர்ள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
சிம்மம்

தம்பதிகள் வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். வேலை தேடுபவர்களுக்கு போட்டித் தேர்வுகள்மூலம் நினைத்த உத்யோகம் கிடைக்கும். அயல்நாடு செல்ல முயற்சித்தவர்களுக்கு விசா கிடைக்கும். பெண்கள் அக்கம் பக்கத்தினரிடம் பேசும்போது வாய் நிதானம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
கன்னி

குடும்பத்தில் நீண்ட காலமாக நிறைவேற்ற வேண்டிய கடமையை இன்று முடித்துவிடுவீர்கள். விருந்து விழா என்று சுப காரியங்களில் கலந்து கொள்வீர்கள். தொழிலை விரிவுபடுத்துவதற்கான வங்கிக் கடன் உதவியும் கிட்டும். ஒரு சிலர் சில கிளைகளைத் துவங்குவர். தேகம் பளிச்சிடும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
துலாம்

இளைஞர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். மார்கெட்டிங் பிரிவினர் புதுப் புது ஆர்டர்கள், ஏஜென்சி எடுப்பீர்கள். அலைபேசியில் பேசிக் கொண்டு வாகனத்தை இயக்க வேண்டாம். உடன் பிறந்தவர்கள் தங்களுக்கு உதவிக்கரம் நீட்டுவார்கள். உடல் நலம் தேறும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
விருச்சிகம்

வெளியூர் பயணம் இன்று செல்ல ஆயத்தமாவீர்கள். சுபகாரிய பேச்சு வார்த்தை சுபமாக முடியும். பிரபலங்களின் வீட்டில் உள்ள நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு வரும். சில்லரை வியாபாரிகள் வியாபாரத்தில் கவனம் தேவை. செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சித் தரும் நல்ல செய்திகள் கிடைக்கும். கேட்டை நட்சத்திரக்காரர்கள் மட்டும் கவனமுடன் இருத்தல் நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்
தனுசு

மூலம் நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் என்பதால் முக்கியமான நபர்களை அதாவது தங்கள் தொழில் சார்ந்தவர்கள் அல்லது நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவுகளிடம் வாக்குவாதத்தைத் தவிர்ப்பது நல்லது. காரணம் இன்று தங்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் சாதாரணமாகப் பேசும் வார்த்தைகள் கூடப் பிரச்சினையைத் தந்து நிரந்தரமாகப் பேசாமல் போக வாய்ய்புள்ளதால் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
மகரம்

அநாவசியச் செலவுகளைத் தவிர்க்கப் பாருங்கள். அநாவசியமாக மற்றவர்கள் விவகாரத்தில் தலையிட வேண்டாம். வேலைச்சுமை இருக்கும். இளைய சகோதர வகையில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். அண்டை வீட்டார் மூலம் சில நன்மைகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்ச்
கும்பம்

வீட்டில் நிம்மதி கிடைக்கும்.பெற்றோரின் அறிவுரையை ஏற்று நடப்பது நல்லது. வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். கவலை வேண்டாம். வாங்கிய கடனை விரைவில் அடைப்பீர்கள். உத்யோகஸ்தர்களுக்கு வேலை பளு அதிகரிக்கும். திட்டமிட்டு வேலையை முடிப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: பொன்வண்ணம்
மீனம்

தம்பதிகள் இணைந்து திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பொருளாதாரத்தில் உயர்வு உண்டு. பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளுங்கள். அவர்கள் போக்கே சென்று அவர்களை உங்கள் வழியில் வரவழையுங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

