Ajith Kumar: வைரலாகும் புகைப்படம்.. ரசிகர்கள் உற்சாகம்!

விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பிற்காக அஜர்பைஜான் சென்றுள்ள நடிகர் அஜித், அங்கு ஜாலியாக வாக்கிங் சென்றபோது எடுத்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

அஜித்தின் 62-வது திரைப்படம் விடாமுயற்சி. அதிரடி ஆக்‌ஷன் படமாக உருவாகும் இதை மகிழ் திருமேனி இயக்கி வருகிறார். இப்படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். என்னை அறிந்தால் படத்துக்கு பின்னர் சுமார் 9 ஆண்டுகளுக்கு பின் அஜித்தும் திரிஷாவும் ஜோடியாக நடிக்கும் படம் இதுவாகும். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது.

விடாமுயற்சி படத்தில் அஜித்துக்கு வில்லனாக பிக்பாஸ் பிரபலம் ஆரவ் நடித்து வருகிறார். அதேபோல் அஜித்தின் மங்காத்தா தோஸ்த்தான ஆக்‌ஷன் கிங் அர்ஜுனும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பை அஜர்பைஜான் நாட்டில் தான் படமாக்கி உள்ளனர். தற்போது விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இன்னும் ஓரிரு மாதங்களில் ஷூட்டிங் முழுமையாக முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Ajith Kumar

இதனிடையே அஜர்பைஜானில் தற்போது கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால் ஷூட்டிங்கை நடத்த முடியாத சூழல் உருவாகி உள்ளது. இதனால் வேறு இடத்தில் படப்பிடிப்பை நடத்த முடிவு செய்துள்ளார்களாம். அதுவரை அஜர்பைஜான் நாட்டில் ஜாலியாக ரிலாக்ஸ் பண்ணி வருகிறது படக்குழு. நடிகர் அஜித்தும், விடாமுயற்சி படத்தின் வில்லனான ஆரவ்வும் அஜர்பைஜானில் ஜாலியாக வாக்கிங் சென்றுள்ளனர். அப்போது எடுத்த புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது.
Ajith Kumar

இதுதவிர நடிகர் அஜித் அஜர்பைஜான் சாலைகளில் உலா வந்தபோது எடுத்த போட்டோஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் நடிகர் அஜித் புது லுக்கில் இருப்பதை பார்த்த ரசிகர்கள் அப்படியே ஹாலிவுட் ஹீரோ போல இருப்பதாக வர்ணித்து வருகின்றனர். விடாமுயற்சி படத்தின் அப்டேட்டை வெளியிடாமல் படக்குழு தாமதப் படுத்தினாலும், அஜித்தின் புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாவதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *