Today Rasi Palan: இன்றைய ராசிப்பலன் – 27.04.2024

Advertisements

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு முக்கியமான முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டிய நாள். மன தைரியத்துடன் இருக்க வேண்டும். பணிகள் அதிகமாகக் காணப்படும். ஆகவே பணிகளில் தவறுகள் ஏற்படாமல் இருக்க கவனமாகப் பணியாற்ற வேண்டும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் மனம் திறந்து பேசுங்கள். தேவை இல்லாமல் செலவு செய்வதை தவிர்க்க வேண்டும். முதுகு வலி ஏற்படும் வாய்ப்புள்ளது.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சி நிறைந்து காணப்படும் நாளாக இருக்கும். அனைவரும் உங்கள்மீது நம்பிக்கையுடன் இருப்பார்கள். பணியிட சூழல் உங்களுக்குச் சாதகமாக இருக்கும். உங்கள் பணிகளை உற்சாகத்துடன் செய்வீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் நட்பான முறையில் பழகுவீர்கள். உங்கள் இருவருக்கிடையே அதிகமான புரிதல் இருக்கும். பணவரவு அதிகமாகக் காணப்படும். அதை நல்ல முறையில் செலவு செய்வீர்கள். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

 

மிதுனம்

மிதுனம் ராசிக்காரர்களுக்கு  உங்கள் கடின முயற்சியின் மூலம் வெற்றி காண்பீர்கள்.  முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு உகந்த நாளாக இருக்கும். உங்கள் பணிகளில் திறமைக்கான பாராட்டுகளைப் பெறுவீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் நேர்மையான முறையில் நடந்து கொள்வீர்கள். இதுவரை வராத பணம் இப்போது கைக்குக் கிடைக்கும். மகிழ்ச்சி காரணமாக ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

 

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு   சவால்களைச் சந்திக்கும் நாளாக இருக்கும். உங்கள் பணிகளில் தவறுகள் ஏற்படாமல் இருக்க கவனமாகப் பணியாற்ற வேண்டும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் அனைத்தையும் பகிர்ந்து கொள்ளுங்கள். அதனால் இருவருக்கிடையே பிரச்சனைகள் வராமல் இருக்கும்.  பணவரவு குறைந்து காணப்படும். அதனால் தேவை இல்லாமல் செலவு செய்வதை தவிர்க்க வேண்டும். குடும்பத்தில் இருப்பவர்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.

 

சிம்மம்

 

சிம்ம ராசிக்காரர்களுக்கு  உகந்த நாளாக இருக்காது. நீங்கள் புத்திசாலித்தனத்துடன் செயல்பட வேண்டும். பணியிடத்தில் கடினமாக உழைப்பதன் மூலம் நற்பலன்களை பெறலாம். மேலும், பணியிடத்தில் கவனமாக இருக்க வேண்டும். துணையுடன் நட்பான முறையில் நடந்து கொள்வது மிகவும் அவசியம். ஆரோக்கியத்தில் தலைவலி பிரச்சனை உண்டாகலாம்.

 

கன்னி

 

கன்னி ராசிக்காரர்களுக்கு  அதிர்ஷ்டகரமான நாளாக இருக்கும்.  நீங்கள் எடுக்கும் முடிவுகள் உங்களுக்குச் சாதகமாக அமையும். பணியிடத்தில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். உங்கள் திறமையினால் பதவி உயர்வு கிடைக்கும். துணையுடன் அன்பாக நடந்து கொள்வீர்கள்.  ஊக்கத்தொகை மூலம் உங்களுக்குப் பணவரவு கிட்டும். மேலும், ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

 

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு  சுமாரான நாளாக இருக்கிறது.  நீங்கள் சாதுர்யமாகச் செயல்பட வேண்டும். பணியிடத்தில் பணிகள் அதிகமாகக் காணப்படும். சக பணியளர்களுடான உறவு சாதகமாக இருக்காது. துணையுடன் அகந்தைப் போக்கை வெளிப்படுத்துவீர்கள்.  நிதி வளர்ச்சி குறைவாக இருக்கும். ஆரோக்கியத்தில் கால்கள் மற்றும் மூட்டுக்களில் வலி ஏற்பட வாய்ப்புள்ளது.

விருச்சிகம்

விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு  சாதகமான நாளாக இருக்காது.  எந்தவொரு செயலைச் செய்வதற்கு முன்பாகவும் ஒன்றிற்கு இரண்டு முறை நன்கு யோசித்து செய்தல் வேண்டும். பணியிடத்தில் கடினமான சூழ்நிலை நிலவும். வேலை சம்மந்தமான பயணம் காணப்படும். துணையுடன் உணர்ச்சிவசப்பட்டு பேசுவீர்கள்.  நிதிநிலைமை சிறப்பாக இருக்காது. தேவையற்ற கூடுதல் செலவுகள் உண்டாகும். ஆரோக்கியத்தில் பல் வலி ஏற்பட வாய்ப்புள்ளது.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு  சாதாரண நாளாக இருக்கும். பணியிடத்தில் முன்னேற்றம் காணப்படாது. கவனக்குறைவு காரணமாகப் பணிகளில் தவறுகள் ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. அதனால் கவனமாகப் பணியாற்ற வேண்டும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் சில வாக்குவாதங்கள் காணப்படும் நாளாக இருக்கும். அதனால் அனுசரித்து செல்வது நல்லது. தேவையில்லாத செலவுகள் காணப்படும். பதட்டத்தை குறித்தால் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

 

மகரம்

மகரம் ராசிக்காரர்களுக்கு  சிறப்பான நாளாக இருக்காது. உங்களிடம் தைரியம் குறைந்து காணப்படும்.  பணியிட சூழல் உங்களுக்குச் சாதகமாக இருக்காது. கவனமாகப் பணியாற்ற வேண்டும். உங்கள் வாழ்க்கைத் துணையிடம் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். பணவரவு குறைந்து காணப்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

 

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு  பொறுமையை கடைபிடிக்க வேண்டிய நாளாக இருக்கும். பணிகள் அதிகமாகக் காணப்படும். அதைக் குறித்த நேரத்தில் முடிக்கத் திட்டமிட்டு பணியாற்ற வேண்டும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் பேசும்போது கவனமாகப் பேச வேண்டும். பணவரவு அதிகமாகக் காணப்படாது. கால் மற்றும் தொடை வலி ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.

 

மீனம்

 

மீன ராசிக்காரர்களுக்கு எந்தச் செயலையும் பொறுமையாகக் கையாளுவது அவசியமானது. பணியிடத்தில் உங்களின் செயல்களைக் கண்டு உயர் அதிகாரிகள் பாராட்டுவார்கள். துணையை வெளியிடங்களுக்கு அழைத்துச் செல்வீர்கள். இதனால் இருவரும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். பணவரவு குறைவாகக் காணப்படும். இதனால் அன்றைய நாள் செலவுகளைச் சமாளிப்பதற்கு சிறியதாகக் கடன் வாங்குவீர்கள்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *