Muhammad Yunus: நோபல் பரிசாளருக்கு சிறை!

நோபல் பரிசு பெற்ற பொருளாதார வல்லுநருக்கு 6 மாதம் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொழிலாளர் சட்டத்தை மீறியதாக முகமது யூனுஸ் மற்றும் 3 நிர்வாகிகள் மீது குற்றம் சாட்டப்பட்டது.

வங்காளதேசத்தைச் சேர்ந்தவர் டாக்டர் முகமது யூனிஸ். பொருளாதார வல்லுநரான இவர், கிராமீன் வங்கி மூலமாக வறுமை ஒழிப்பு பிரசாரத்தில் ஈடுபட்டதற்காக, கடந்த 2006-ம் ஆண்டு  அமைதிக்கான நோபல் பரிசு  வென்றார்.

இவர் கிராமீன் டெலிகாம் தலைவராக பதவி வகித்த போது, தொழிலாளர் நல நிதியை உருவாக்கத் தவறியதாக தொழிலாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தொழிலாளர் சட்டத்தை மீறியதாக முகமது யூனுஸ் மற்றும் 3 நிர்வாகிகள் மீது குற்றம் சாட்டப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அப்போது முகமது யூனுஸ் உள்ளிட்ட 4 பேருக்கும் தலா 6 மாத சிறைத்தண்டனையும், 25,000 டாகா (வங்காளதேச கரன்சி) அபராதமும் விதிக்கப்பட்டது.

மேலும் தண்டனை பெற்ற 4 பேரும் ஜாமீன் மனு தாக்கல் செய்தனர். மனுவை உடனடியாக பரிசீலனை செய்த நீதிமன்றம், ஒரு மாதம் ஜாமீன் வழங்கியது. தொழிலாளர் சட்டத்தின்படி, 4 பேரும் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

முற்றிலும் அரசியல் காழ்ப்புணர்ச்சியின்  காரணமாக முகமது யூனுசுக்கு தண்டனை விதிக்கப்பட்டிருப்பதாக அவரது ஆதரவாளர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *