Today Rasi Palan: இன்றைய ராசிப்பலன் – 20.12.2023

Advertisements
மேஷம்

 

காரிய அனுகூலமான நாள். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுடன் வீண் செலவுகளும் ஏற்படும். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த பிணக்குகள் நீங்கும். வியாபாரத்தில் சக வியாபாரி களால் அனுகூலம் உண்டாகும். விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். ஆஞ்சநேயரை வழிபட சிறப்பான நாளாக அமையும் இன்றைய அதிர்ஷ்ட எண் 3.

ரிஷபம்

தன்னம்பிக்கையுடன் செயல்படக்கூடிய ரிஷப ராசிக்காரர்களே  எதிரிகளின் சூழ்ச்சிகளை முறிய டிப்பீர்கள். காரியங்கள் ஆதாயம் தருவதாக இருக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். முக்கிய முடிவு எடுப்பதற்கு உகந்த நாள். நண்பர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருக்கும். தட்சிணாமூர்த்தி வழிபாடு தடைகளைத் தகர்க்கும். இன்று சாஸ்தாவை வணங்கி வர சிறப்பான நாளாக அமையும் இன்றைய அதிர்ஷ்ட எண் 1.

 

மிதுனம்

 

எதிலும் நிதானத்தை கடைபிடிக்கும் மிதுன ராசிக்காரர்களே சிந்தித்து செயல்படவேண்டிய நாள். தாய்வழி உறவினர்கள் மூலம் எதிர் பார்த்த காரியம் நடக்கும் பிள்ளைகளின் பிடிவாதம் சற்று கோபத்தை ஏற்படுத்தினாலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். குடும்பத்தில் அனைவரையும் அனுசரித்துச் செல்வது நல்லது. அரசாங்க விவகாரங்களில் பொறுமை அவசியம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவான அணுகுமுறை தேவை.இன்று நீங்கள்அம்பிகையை வழிபடுவது சிறப்பான நாளாக அமையும் இன்றைய அதிர்ஷ்ட எண் 6.

கடகம்

 

முயற்சி திருவினையாக்கும் என்ற எண்ணம் கொண்ட கடக ராசிக்காரர்களே புதிய முயற்சிகள் அனுகூலமாக முடியும். எதிர்பார்த்த சுபச்செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும். இளைய சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள். தாயாரின் விருப்பத்தை நிறைவேற்றும் வாய்ப்பு கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனை அதிகரிப்பதுடன் லாபமும் எதிர்பார்த்ததைவிட கூடுதலாகக் கிடைக்கும். வேங்கடேச பெருமாளை வழிபடுவது சிறப்பான நாளாக அமையும். இன்றைய அதிர்ஷ்ட எண் 4.

 

சிம்மம்

 

எதற்கும் அஞ்சாத சிம்ம ராசிக்காரர்களே இன்று அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். எதிர்பாராத பணவரவுடன் திடீர் செலவுகளும் ஏற்படும். சகோதர்களால் சில சங்கடங்களைச் சமாளிக்க வேண்டியிருக்கும். உறவினர்களுடன் பேசும்போது வீண் மனவருத்தம் ஏற்பட வாய்ப்பு ஏற்படும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். பணியாளர்களால் செலவுகள் ஏற்படக்கூடும். சூரிய வழிபாடு  செய்து வர சிறப்பான நாளாக அமையும் என்று அதிர்ஷ்ட எண் 5.

கன்னி

 

எப்பொழுதும் சுறுசுறுப்பான கன்னி ராசிக் காரர்களே உற்சாகமான நாள். ஆனால், புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாகனத்தில் செல்லும் போது கவனமாக இருக் கவும். எதிர்பாராத வேலைச்சுமையின் காரணமாக சற்று சோர்வு உண்டாகும். வியாபாரத்தில் விற் பனையும் லாபமும் அதிகரிக்கும். பங்குதாரர்களிடம் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும். வலம்புரி விநாயகரை வழிபாட்டால் சிறப்பான நாளாக அமையும் இன்றைய அதிர்ஷ்ட எண் 6.

 

துலாம்

 

சமமான எண்ணம் கொண்ட துலா ராசிக்காரர்களே மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். சிலருக்கு திடீர் பணவரவுக்கும் எதிர்பாராத செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டு. உறவினர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும். தாய்வழி உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்பட்டாலும் பக்குவமாகச் சமாளித்து விடுவீர்கள். வியாபாரத்தில் பணியாளர்களாலும் பங்குதாரர்களாலும் செலவுகள் ஏற்படும். நரசிம்மரை வழிபடுவதால் இன்று சிறப்பான நாளாக அமையும் இன்றைய அதிர்ஷ்ட எண் 7.

 

விருச்சிகம்

 

எடுத்த காரியத்தை இனிதே செய்து முடிக்கும் விருச்சிக ராசிக்காரர்களே காரியங்கள் அனுகூலமாக முடியும். தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சிக்கு ஆதரவாக இருப்பார். கணவனும் மனை வியும் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. வியாபாரத்தில் விற்பனை வழக்கம் போல் இருந்தாலும், பணியாளர்கள் வகையில் செலவுகள் அதிகரிக்கும். முருகப்பெருமானை வழிபடுவதால் சிறப்பான நாளாக அமையும். இன்றைய அதிர்ஷ்ட எண் 8.

 

தனுசு

 

சோம்பலைப் பொருட்படுத்தாமல் உழைக்கும் தனுசு ராசிக்காரர்களே உற்சாகமாகச் செயல்படுவீர்கள். தந்தை வழியில் அனுகூலப் பலன்கள் ஏற்படும். குடும்பத்தில் உங்கள் அலோசனைக்கு மிகுந்த முக்கியத்துவம் கிடைக்கும். பிள்ளைகள் மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களால் ஆதாயம் உண்டாகும். லாபமும் கூடுதலாகக் கிடைக்கும். ஆஞ்சநேயர் வழிபாடு செய்ய என்று சிறப்பான நாளாக அமையும் என்று அதிர்ஷ்ட எண் 2.

 

மகரம்

 

எடுத்த காரியத்தை சாதிக்கத் துடிக்கும் மகர ராசிக்காரர்களேபுதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். குடும்பப் பொறுப்புகளை நிறைவேற் றும் வகையில் சற்று அலைச்சல் ஏற்படக்கூடும். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். தந்தையுடன் ஏற்பட்டிருந்த மனஸ்தாபம் நீங்கும். அவரிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வியாபாரத்தில் வழக்கமான நிலையே காணப்படும். இன்று தட்சிணாமூர்த்தி வழிபாட்டால் இனிமையான நாளாக அமையும் இன்றைய அதிர்ஷ்ட எண் 6.

கும்பம்

 

முயற்சியை கைவிடாது கும்ப ராசிக்காரர்களே இன்று புதிய முயற்சியில் ஈடுபடு படுவதால் லாபம் ஏற்படும். தாய்வழி உறவுகளால் சில லாபங்கள் ஏற்படக்கூடும். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். அரசாங்கக் காரியங்கள் விரைவில் முடியும் மற்றவர்களுடன் பேசும்போது பதற்றம் வேண்டாம். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் சில பிரச்னைகள் ஏற்பட்டா லும் பாதிப்பு இருக்காது. பைரவரை வழிபடுவதால் இன்று சிறப்பான நாளாக அமையும் இன்றைய அதிர்ஷ்ட எண் 9.

 

மீனம்

 

சஞ்சலம் மிகுந்த மீன ராசிக்காரர்களே வீண்விரயம் அதிகரிக்கும் கணவன் – மனைவிக்கி டையே கருத்துவேறுபாடு ஏற்பட்டுப் பின் மறையும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் சில பிரச்னை கள் ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகளுக்காக சுப செலவு செய்யவேண்டி வரும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். வாடிக்கையாளர்களிடம் கனிவாக நடந்துகொள்வது அவசியம். சிவ பெருமானை வழிபட இன்று சிறப்பான நாளாக அமையும் இன்றைய அதிர்ஷ்ட எண் 6.
ஜோதிட ஆன்மீக தகவல்:
ரூபி அல்லது மாணிக்கம் இந்த கல் நவகிரகத்தில் சூரியனுக்கு உரியது இந்த ரத்தினத்தை ஆண்களும் பெண்களும் வலது கையில் மோதிரவர்கள் அணிய வேண்டும் ஜாதகத்தில் சூரியன் நீச்சமாகவோ அல்லது வக்கிரமாகவோ அமைந்தால் இந்த ரத்தினத்தை அணிவது மிகவும் உத்தமம் இதை வெள்ளி அல்லது தங்கத்தில் செய்து அணியலாம் மற்றும் தந்தை வழி உறவினர்கள் அரசாங்க உத்தியோகம் போன்றவற்றுக்கு இந்த ரத்தினத்தை அணிந்தால் சகல காரியத்திலும் வெற்றி பெறலாம் மீண்டும் நாளை சந்திப்போம் நன்றி வணக்கம்.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *