Today Rasi Palan: இன்றைய ராசிப்பலன் – 12.12.2023

மேஷம்

உறுதியான உள்ளம் கொண்ட மேஷ ராசிக்காரர்களே இன்று உங்கள் மனதில் நிறைய விஷயங்களைச் சிந்தித்து உன் வருகிறீர்கள், ஆனால் அந்த விஷயங்களை விரைவாகச் சிந்திக்க வேண்டாம். உங்களிடம் உள்ள பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளும் திறமை இன்று உங்களுக்கு உதவியாக இருக்கும். உங்களைச் சுற்றியுள்ள நல்லெண்ணம் கொண்ட நபர்களால் கவரப்படுவீர்கள். உங்கள் மனதை வலுவாக வைத்திருங்கள், நீங்கள் கேட்கும் அனைத்தையும் நம்ப வேண்டாம். சிக்கலான விஷயங்களை மட்டும் நிராகரிக்க வேண்டாம். ஒரு நேரத்தில் ஒரே ஒரு சிக்கலுக்கு மட்டும் தீர்வு காணுங்கள். இன்று தட்சிணாமூர்த்தியை வழங்கி வரை இனிதான நாளாக அமையும். இன்றைய அதிர்ஷ்ட எண் 3.

ரிஷபம்

எதற்கும் சளைக்காத ரிஷப ராசிக்காரர்களே இவர்கள் வைராக்கியம் அல்லது பிடிவாதம் குணம் கொண்டவர்கள். தேச நலன் பற்றிய சிந்தனை இருக்கும். எல்லா காரியத்தையும் எடுத்து நிறைவேற்ற வேண்டும் என்ற பண்பு இருக்கும். இவர்கள் துணிச்சல் மிகுந்தவர்கள். இவர்கள் பெரியவர்களிடம் மட்டுமே கீழ்படிவார்கள். எதையும் வெளிப்படையாக பேசும் குணம் இருக்கும். எதையும் ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மை இருக்கும். இவர்களுக்கு ஆன்மீகத்தில் நாட்டம் இருக்கும். தந்தை வழி சொத்தில் லாபமுண்டு. அவர்களிடம் முரண்பாடு ஏற்பட்டு பின் சரியாகும். இன்று நவகிரக வழிபாடு செய்தால் இனிமையான நாளாக அமையும்.. அதிஷ்ட எண் 7.

மிதுனம்

எழுதுதல் என்பது இவர்களுக்கு பிடித்த ஒன்று. இவர்கள் சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் வளைந்து கொடுக்கக் கூடியவர்கள். இவர்களிடம் நகைச்சுவை கலந்த பேச்சு இருக்கும். இவர்கள் கலை மற்றும் தொழில்நுட்ப பிரிவில் வல்லவர்கள். இவர்களுக்கு எதையும் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற ஆர்வம் இருக்கும். இவர்கள் காரண காரியம் அறிந்து செயல்பட கூடியவர்கள். இவர்களது இயல்பு தந்திரமாக பேசுதல் எதையும் புரிந்து கொள்ளும் திறன் இருக்கும். வெளிநாடு செல்ல வாய்ப்புண்டு படிப்பில் முன்னேற்றம் காணும். இன்று துர்க்கையை வணங்கி வர இனிமையான நாளாக அமையும் இன்றைய அதிர்ஷ்ட எண் 6.

கடகம்

தொண்டு செய்தல் என்பது இவர்களுக்கு பிடித்த ஒன்று. அனைவருக்கும் நன்மை செய்ய விரும்புதல் என்பது இவர்களது இயல்பு. மற்றவர்களுக்கு உதவுகின்ற மனப்பான்மை இருக்கும். இவர்களுக்கு நல்ல ஞாபக சக்தி இருக்கும். மன்னிக்கும் குணம் பெற்றவர்கள். தாய் வழியால் லாபம் உண்டு. பூர்விக சொத்துக்கள் வந்து சேரும். உடல் உபாதை குறையும். இன்று நீங்கள் தன்வந்திரியை வணங்கி வர இனிமையான நாளாக அமையும். இன்றைய அதிர்ஷ்ட எண் 1.

 

சிம்மம்

அனைத்து துறையிலும் தலைமை வகிக்க கூடியவர்கள். அனைத்து செயல்களிலும் இவர்களது ஒத்துழைப்பு மற்றவர்களுக்கு நன்றாக இருக்கும். சுதந்திரமாக செயல்பட கூடியவர்கள். எதையும் ஒருங்கிணைக்கும் வல்லமை பெற்றவர்கள். ஒற்றுமை குணம் உடையவர்கள். தயாள குணம் கொண்டவர்கள். எதையும் பகிர்ந்து கொள்ளுதல் என்ற பண்பு இருக்கும். அனைத்தையும் சமமாக பாவிப்பீர்கள். இன்று நீங்கள் மகாலட்சுமி வழங்கி வர இனிமையான நாளாக அமையும் இன்றைய அதிர்ஷ்ட எண் 6.

கன்னி

இனிமையாக எண்ணம் கொண்ட கன்னி ராசிக்காரர்களே தூய்மையாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள். அனைவரிடமும் பழகுதல் என்பது இவர்களது இயல்பு. சுதந்திரமான நிலை உடையவர்கள். தனிநபர் உரிமை பற்றி பேசுபவர்கள். தூய்மையான எண்ணம் உடையவர்கள். எதிலும் உண்மையாக நடந்து கொள்ளக் கூடியவர்கள். நட்பு பாராட்டக் கூடியவர்கள் நல்லொழுக்கம் உடையவர்கள். இன்று ரங்கநாதரை வணங்கி வர இனிமையான நாளாக அமையும் இன்றைய அதிர்ஷ்ட எண் 5

 

துலாம்

சமநிலை காத்தல் என்பது இவர்களது இயல்பு. பாரபட்சமின்மையின்றி நடக்கக் கூடியவர்கள். எதிலும் நியாயம் பேசுதல் இவர்களது இயல்பு. நடுநிலையாக நடக்கக் கூடியவர்கள். இவர்கள் அணியும் துணையும் தூய்மையாக அணிய வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். பிறருக்கு விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை அதிகமாக இருக்கும். கொடுக்கல் வாங்கலில் லாபம் உண்டு. இன்று காளிதேவியை வணங்கி வர இனிமையான நாளாக அமையும் இன்றைய அதிர்ஷ்ட எண் 2

 

விருச்சிகம்

உதவும் மனப்பான்மை உடைய விருச்சிக ராசிக்காரர்களே விழிப்புணர்வுடன் இருத்தல் இவர்களது பண்பு எதிலும் அதிகப்படியான யோசனை உடையவர்கள். பகுத்தறிதல் இவர்களது இயல்பு. இவர்கள் அதிகம் மற்றவர்களை கண்காணிப்பார்கள். அறிவுநுட்பம் உடையவர்கள். கோபம் வந்துவிட்டால் மனதால் பொறுத்துக் கொள்வீர்கள். இன்று தட்சிணாமூர்த்தியை வணங்கி வர இனிமையான நாளாக அமையும் இன்றைய அதிர்ஷ்ட எண் 7.

 

தனுசு

லட்சியம் உடைய தனுசு ராசிக்காரர்களே உழைப்பை நேசிப்பது இவர்களது இயல்பு. திடமான நோக்கம்/குறிக்கோளுடன் இருப்பார்கள். விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி என்று எண்ணுவீர்கள் நம்பிக்கைக்குரியவர்கள். ஊக்கத்துடன் முயற்சியும் வேண்டும் என்று நினைப்பவர்கள். மற்றவர்களை புண்படும்படி பேச நினைக்காதவர்கள். இன்று நீங்கள் சரஸ்வதி தேவியை வணங்கி வர இனிமையான நாளாக அமையும் இன்றைய அதிர்ஷ்ட எண் 8.

 

மகரம்

அமைதி குணம் உடைய மகர ராசிக்காரர்களே கண்ணியம், கட்டுப்பாடு உடையவர்கள். சிறந்த வேலைக்காரர். எந்த வேலையை கொடுத்தாலும் சிறப்பாக முடிப்பார்கள். எதிலும் பொறுமை குணம் உடையவர்கள்.. இன்று சகோதரர்களால் நன்மை உண்டு. மேலதிகாரிகளால் லாபம் உண்டு மேல் அதிகாரிகளால் லாபம் உண்டு. திடீர் தன வரவு ஏற்படும். ஆறுமுகனை வணங்கி வந்தால் இனிமையான நாளாக அமையும். இன்றைய அதிர்ஷ்ட எண் 1.

கும்பம்

சுய அதிகாரம் உடைய கும்ப ராசிக்காரர்களே மதிப்பு மற்றும் மரியாதையுடன் நடக்கக் கூடியவர்கள். இவர்களை மற்றவர்கள் கட்டுப்படுத்தினால் இவர்களுக்கு பிடிக்காது. ரகசியம் காப்பாளர்கள். பொது கட்டுப்பாடு உடையவர்கள். சுயமரியாதை குணமடையவர்கள். நிதானம் மிக்கவர்கள் நயமாக பேசி காரியத்தை சாதிக்கக் கூடியவர்கள். இன்று நரசிம்மரை வணங்கி வந்தால் இனிமையான நாளாக அமையும். இன்றைய அதிர்ஷ்ட எண் 4.

 

மீனம்

நற்குணம் உடையவர்கள். நடப்பதை முன்கூட்டியே அறிபவர்கள் ஞானியர்கள் நேர்மறை சிந்தனை உடையவர்கள். மீன் போன்ற விழிகளை பெற்றிருப்பவர்கள். முன்யோசனை உடையவர்கள். விருந்தோம்பல் பண்பு உடையவர்கள். கடல் பிரயாணம் ஏற்படும். கடன் தீரும். சுய தொழிலில் முன்னேற்றம் காணும். இன்று பார்வதி தேவியை வணங்கி வர இனிமையான நாளாக அமையும். இன்றைய அதிர்ஷ்ட எண் 7.
ஜோதிட ஆன்மீக தகவல்:
ரூபி அல்லது மாணிக்கம் இந்த கல் நவகிரகத்தில் சூரியனுக்கு உரியது இந்த ரத்தினத்தை ஆண்களும் பெண்களும் வலது கையில் மோதிரவர்கள் அணிய வேண்டும் ஜாதகத்தில் சூரியன் நீச்சமாகவோ அல்லது வக்கிரமாகவோ அமைந்தால் இந்த ரத்தினத்தை அணிவது மிகவும் உத்தமம் இதை வெள்ளி அல்லது தங்கத்தில் செய்து அணியலாம் மற்றும் தந்தை வழி உறவினர்கள் அரசாங்க உத்தியோகம் போன்றவற்றுக்கு இந்த ரத்தினத்தை அணிந்தால் சகல காரியத்திலும் வெற்றி பெறலாம் மீண்டும் நாளை சந்திப்போம் நன்றி வணக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *