
மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு சுமாரான நாளாக இருக்கிறது. நன்மை தீமைஇரண்டும் கலந்தும் காணப்படும். பணியிடத்தில் அதிக பணிகள் காணப்படும். சக பணியாளர்களுடன் தகவல் பரிமாற்றத்தில் பிரச்சினை ஏற்படலாம். துணையுடன் நட்பான அணுகுமுறை அவசியம். , ஆன்மீக பயணத்திற்காகப் பணத்தை செலவு செய்ய நேரிடும். ஆரோக்கியத்தில் கண்களில் கவனம் செலுத்த வேண்டும்.
ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு உகந்த நாளாக இருக்காது. உங்கள் முயற்சியில் சில தடைகள் காணப்படும். பணியிடத்தில் அதிக பணிகள் காணப்படும். பணியிடசூழல் சற்று கடினமாக இருக்கும். துணையுடன் மோதல் ஏற்படலாம். போதியஅளவில் பண புழக்கம் இருக்காது. ஆரோக்கியத்தில் முதுகுவலி ஏற்பட வாய்ப்புள்ளது.
மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு சாதகமான நாளாக இருக்கிறது.பணியிடத்தில் பணிகளை எளிதாகச் செய்து முடிப்பீர்கள். மேலும், பணியில் புதிய வாய்ப்புகளும் கிடைக்கும். துணையுடன் சுமூகமான உறவு நிலவும். பணவரவு அதிகமாக இருக்கும். பயனுள்ள விஷயங்களுக்குப் பணத்தை செலவு செய்வீர்கள். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு சாதகமான நாளாக இருக்காது. எதிலும் சற்று கவனமாக இருக்க வேண்டும். பணியிடச் சூழல் மகிழ்ச்சிகரமாக இருக்காது. பணியடித்தில் சில சௌகரியங்களை சந்திக்க நேரிடும். துணையுடன் நல்லுறவை பராமரிக்க மனம் திறந்து பேச வேண்டும். குறைந்த அளவில் தான் பணப்புழக்கம் இருக்கும். அதனை, வீட்டின் புனரமைப்பிற்கான செலவு செய்ய நேரிடலாம். ஆரோக்கியத்தில் காய்ச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது.
சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு சிறப்பான நாளாக இருக்காது. உங்களுக்குப் பொறுப்புகள் அதிகமாக இருக்கும். பணியிடத்தில் உங்களுக்குச் சாதகமான சூழ்நிலை நிலவாது. பணிகளைத் திட்டமிட்டு பணியாற்றுவது அவசியம். துணையுடன் உணர்ச்சிவசப்பட்டு பேசுவீர்கள். பணப்புழக்கம் போதிய அளவு இருக்காது. லாபமும் இருக்காது. நஷ்டமும் இருக்காது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு சுமாரான நாளாக இருக்கிறது. பயணங்கள் மேற்கொள்வீர்கள். சவாலான சூழ்நிலைகளைச் சந்திப்பீர்கள். பணியிடத்தில் தவறுகள் நேர வாய்ப்புள்ளது. துணையுடன் உணர்ச்சி வசப்படுவதை தவிர்க்க வேண்டும். பண வரவு குறைவாகக் காணப்படும். குடும்பத்திற்காகச் செலவு செய்ய நேரிடும். ஆரோக்கியத்தில் தூக்கமின்மை பிரச்சனை ஏற்படலாம்.
துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு மிதமான பலன்கள் காணப்படும். நீங்கள் சில தடைகளைச் சந்திக்க நேரிடும். பணியிடத்தில் பல தடைகளைச் சந்தித்து வெற்றி பெறுவீர்கள். துணையிடம் நேர்மையாக நடந்து கொள்வீர்கள். பணப்புழக்கம் போதிய அளவில் இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
விருச்சிகம்

விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு சிறப்பான நாளாக இருக்கிறது. நாழி, உங்களுக்கு எதிர்பாராத நன்மைகள் கிடைக்கும். பணியிடத்தில் சிறப்பாகப் பணியாற்றி மேலதிகாரியிடம் பாராட்டு பெறுவீர்கள். துணையுடன் மகிழ்ச்சியான தருணங்களைப் பகிர்ந்து கொள்வீர்கள். பணப்புழக்கம் போதிய அளவில் இருக்கும். பூர்வீக சொத்துமூலம் பணவரவு ஏற்படலாம். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு உகந்த நாளாக இருக்காது. நாழி, அவசர முடிவுகள் எதையும் எடுக்க வேண்டாம். பணியிடத்தில் தவறுகள் நேர வாய்ப்புள்ளதால் பணிகளைத் திரமிடும் கவனமுடன் செய்தல் வேண்டும். சகஜமான அணுகுமுறை தேவை. பயணத்தின்போது பண இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால் கவனமாகப் பணத்தை கையாள வேண்டும். ஆரோக்கியத்தில் தோள் வலி ஏற்பட வாய்ப்புள்ளது.
மகரம்

மகரம் ராசிக்காரர்களுக்கு சிறப்பான நாளாக இருக்காது. நீங்கள் புத்திசாலித்தனமாக இருப்பது நல்லது. பணியிட சூழல் சிறப்பாக இருக்காது. சக பணியாளர்கள் மற்றும் மேலதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவீர்கள். துணையுடன் மனம் திறந்து பேச வேண்டும். கவனக்குறைவு காரணமாகப் பணத்தை இழப்பீர்கள். ஆரோக்கியத்தில் முதுகுவலி ஏற்படலாம்.
கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு நல்ல நாளாக இருக்கிறது. முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு பயன்படுத்தி கொள்ளலாம். பணியிடத்தில் பணியில் திறமையை வெளிப்படுத்தி மேலதிகாரியிடம் பாராட்டு பெறுவீர்கள். துணையுடன் காதல் உணர்வுகளை வெளிப்படுத்துவீரகள். நிதி வளர்ச்சி நன்றாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு சுமூகமான நாளாக இருக்கிறது. உங்கள் முயற்சியில் நல்ல பலனைப் பெறுவீர்கள். பணியிடத்தில் முன்னேற்றம் காணப்படும். கணவன் மனைவி இடையே நல்ல புரிந்துணர்வு காணப்படும். ஊக்கத் தொகை அல்லது சலுகை வகையில் பண வரவிற்கு வாய்ப்ப்புள்ளது.ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.



