Today Rasi Palan: இன்றைய ராசிப்பலன் – 11.12.2023

Advertisements
மேஷம்

எதையும் எளிதாக எடுத்துக் கொள்ளும் மேஷ ராசிக்காரர்களே இன்று வேலை பளு கொஞ்சம் அதிகமாக இருக்கும். நீங்கள் எதிர்பார்த்ததை விட சில சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஆனால் அந்த அனுபவங்கள் உங்களுக்கு வாழ்க்கையில் நிறைய பாடங்களை கற்றுக் கொடுக்கும். நிதிநிலைமை சீராக இருக்கும். வாரா கடன் வசூல் ஆகும். ஆரோக்கியத்தில் நல்ல மேம்பாடு இருக்கும். சில சங்கடங்களை எதிர்கொள்ள வேண்டிய நாளாக இருந்தாலும், இன்றைய நாள் பெரிய அளவில் பாதிப்புகளை கொடுக்காது.இன்று ரங்கநாதரை வணங்கி வர இனிய நாளாக அமையும். இன்றைய அதிர்ஷ்ட எண் 9.

ரிஷபம்

விடாமுயற்சி உடைய ரிஷப ராசிக்காரர்களே இன்று போட்டியும் பொறாமையும் நிறைந்த நாளாக இருக்கும். நீங்கள் எந்த ஒரு விஷயத்தையும் இன்று சாதாரணமாக செய்ய மாட்டீங்க. அடுத்தவர்களோடு போட்டி போட்டு தான் செய்வீங்க. அவர்கள் இது செய்கிறார்கள், நாமும் இதை செய்து பாக்கணும், என்று அடுத்தவர்களை பார்த்து உங்களுடைய சிந்தனை இருக்கும். ஆனால் அது தவறு. கூடுமானவரை தவிர்த்துக் கொள்ளுங்கள். மனிதர்களுக்கு அடுத்தவர்களை பார்த்து ஆசை வருவது இயல்பாக இருந்தாலும், அந்த ஆசையை குறைக்கனும். இன்று வனதுர்க்கை வணங்கி வர சிறப்பான நாளாக அமையும் அதிர்ஷ்ட எண்கள் 7.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோம்பேறித்தனம் இருக்கும். எந்த ஒரு வேலையிலும் சுறுசுறுப்பாக ஈடுபட மனசு ஒத்துழைக்காது. இன்று ஆரோக்கியமான உணவை சாப்பிடுங்கள். அசைவம் சாப்பிடுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள். இறை வழிபாட்டில் ஈடுபடுங்கள். யாரிடமும் போட்டி பொறாமையோடு நடந்து கொள்ள வேண்டாம். அடம் பிடித்து சில விஷயங்களை சாதிக்க வேண்டாம்.
இன்று விநாயகரை வணங்கி வர சிறப்பான நாளாக அமையும். இன்றைய அதிர்ஷ்ட எண் 6.

கடகம்

அதிகம் ஆசைப்படாத கடக ராசிக்காரர்களே இன்று புதிய முயற்சிகள் வெற்றியைக் கொடுக்கும். அலுவலகத்தில் வேலை பளு அதிகமாக இருந்தாலும், அதை சிறப்பாக சமாளித்து செய்து முடிப்பீர்கள். நல்ல பெயர் வாங்குவீர்கள். இந்த நாள் இறுதியில் உடல் சோர்வு மன சோர்வு இருக்கும். வீட்டிற்கு வந்தவுடன் மனைவியின் அனுசரணையான பேச்சு உங்களை உத்வேகப்படுத்தி விடும். இன்று சரஸ்வதி தேவியை வணங்கி வர சிறப்பான நாளாக அமையும் இன்றைய அதிர்ஷ்ட எண் 8.

 

சிம்மம்

அசராத எண்ணம் கொண்ட சிம்ம ராசிக் காரர்களே இன்று வெற்றிக்கான நாளாக இருக்கும். சின்ன சின்ன வேலைகளில் இருந்து பெரிய பெரிய வேலை செய்பவர்கள் வரை உங்களுடைய வேலையில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். அதிக லாபம் அடைவீர்கள். மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் சில வேலைகளை செய்து திருப்தியும் அடைவீர்கள். மன நிறைவான இந்த நாளில் கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள்.
இன்று வழி நவகிரக வழிபாடு செய்து வர சிறப்பான நாளாக அமையும். இன்றைய அதிர்ஷ்ட எண் 6.

 

கன்னி

அஞ்சா நெஞ்சம் கொண்ட கன்னி ராசிக்காரர்களே இன்று கொஞ்சம் நிதானம் தேவை. எந்த விஷயத்திலும் அவசரப்பட்டு முடிவெடுக்க கூடாது. முன்பின் தெரியாதவர்களை நம்பாதீங்க. புது தொழில் தொடங்குவதற்கு உண்டான பேச்சை பேச வேண்டாம். அன்றாட வேலைகளை பொறுப்போடு செய்தாலே போதும். இன்றைய நாள் எந்த பிரச்சனையும் இல்லாமல் செல்லும். புது மனிதர்களுடைய நட்பு கூட இன்று பிரச்சினையை கொடுக்கும் கொஞ்சம் கவனம் இருக்கட்டும். இன்று தக்ஷிணாமூர்த்தி வணங்கி வர இனிமையான நாளாக அமையும் இன்றைய அதிர்ஷ்ட எண் 4.

 

துலாம்

எதற்கும் சலிக்காத இதயம் கொண்ட துலா ராசி காரர்களே இன்றைய நாள் சோம்பேறித்தனமாக தொடங்கினாலும், அடுத்தடுத்து செய்யக்கூடிய வேலைகளில் உங்களுக்கு ஆர்வம் அதிகரித்து, சூடுபிடிக்க தொடங்கிவிடும். நண்பர்களுடன் நேரத்தை அதிகம் செலவு செய்வீர்கள். மனதில் இருந்த பாரம் லேசானது போல ஒரு உணர்வு இருக்கும். குடும்பத்தில் இருந்த சண்டை சச்சரவு ஒரு முடிவுக்கு வரும். கமிஷன் தொழில் செய்பவர்களுக்கு இன்றைய நாள் லாபகரமான நாளாக அமையும். இன்று தன்வந்திரியை வணங்கி வர இனிமையான நாளாக அமையும் இன்றைய அதிர்ஷ்ட எண் 5.

 

விருச்சிகம்

 பொறுப்பு நிறைந்த தனுசு ராசிக்காரர்களே இன்றைய நாள் ஏற்ற இறக்கங்கள் நிறைந்த நாளாக இருக்கும். உங்களுடைய வேலைகளை பொறுப்போடு செய்து கொள்ளுங்கள். பேருந்தில் செல்பவர்கள், ஷேர் ஆட்டோவில் செல்பவர்கள், உங்களுடைய பொருட்களை ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ளுங்கள். மூன்றாவது மனிதர்களை நம்ப வேண்டாம். தேவையற்ற விஷயங்களுக்கு வாக்குவாதம் செய்ய வேண்டாம். மேலும் என்று நீங்கள் நாராயணியை வணங்கி வர சிறப்பான நாளாக அமையும் என்ற அதிர்ஷ்டங்களின் 6.

 

தனுசு

எதையும் ஆக்கப்பூர்வமாக யோசிக்கும் தனுசு ராசி அன்பர்களே இன்று கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடுவதை தவிர்த்து விடுங்கள் உடற்பயிற்சி செய்வதன் மூலம் உடல் ஆரோக்கியத்தில் மேம்படுவீர்கள் உங்கள் மனைவியுடன் சேர்ந்து எதிர்காலத்தின் பொருளாதார திட்டத்தை எப்படி உருவாக்கலாம் என்று ஆலோசனை செய்வீர்கள் அதன் மூலம் நீங்கள் வெற்றியையும் காண்பீர்கள் உங்கள் குழந்தைகளால் இன்று நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள் இன்று உங்களுக்கு சிறந்த நாளாக அமைய வாழ்த்துக்கள் உண்டு உங்கள் அதிர்ஷ்ட எண் எட்டு இன்று நாக தேவதை வழிபட இனிமையான நாளாக அமையும் வாழ்த்துக்கள்.

 

மகரம்

ஏற்ற இறக்கம் நிறைந்த மகர ராசிக்காரர்களே இன்றைய நாள் சுகமான நாளாக இருக்கும். எந்த ஒரு கஷ்டமும் இருக்காது. நீங்கள் தொட்ட வேலையில் எல்லாம் வெற்றி கிடைக்கும். சுலபமாக இன்றைய நாளை கடந்து செல்வீர்கள். தாய் வழி உறவின் மூலம் சில ஆதாயங்கள் கிடைக்கும். உறவினர்களின் வருகை மனநிம்மதியை கொடுக்கும். நீண்ட நாள் பிரிந்த உறவு ஒன்று சேர வாய்ப்புகள் உள்ளது.
இன்று வெங்கடாஜலபதி வணங்கி வர இனிமையான நாளாக அமையும் என்று அதிர்ஷ்ட எண் 7.

கும்பம்

எருமை போன்ற சுறுசுறுப்பு உடைய கும்ப ராசிக்காரர்களே வியாபாரத்தில் இன்று சின்ன சின்ன தடைகள் வரலாம். சூழ்நிலைக்கு ஏற்றவாறு சிந்திக்கத் தொடங்குங்கள். ஒரே மாதிரி சிந்தனையை வைத்துக் கொண்டிருந்தால், பிரச்சனைகள் வரும். பேச்சில் கவனம் தேவை. யாருக்கும் அனாவசியமாக எந்த விஷயத்திலும் வாக்கு கொடுத்து விட வேண்டாம். அனாவசியமான வார்த்தைகளை பயன்படுத்தாதீங்க. முன் கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். அமைதியாக இருந்தால் சில விஷயங்களில் இன்று பிரச்சனை வராது. இன்று ஹயகிரி வரை வணங்கி வர சிறப்பான நாளாக அமையம் இன்றைய அதிர்ஷ்ட எண் 1.

 

மீனம்

சஞ்சலமும் சந்தோஷமும் நிறைந்த மீன ராசிக்காரர்களே இன்று கொஞ்சம் அலைச்சல் நிறைந்த நாளாக இருக்கும். அலைச்சல் தான் வந்தது. வேலை சரியாக முடியுமா என்று கேட்டால் அதிலும் பின்னடைவு இருக்கும். சின்ன சின்ன சஞ்சலங்களோடு இன்றைய நாளில், சின்ன சின்ன தோல்விகளை சந்திப்பதால் மனமும் சோர்வடையும். கவலை படாதீங்க இன்று மாலை மனசுக்கு பிடிச்ச கோயிலுக்கு போயிட்டு வாங்க நன்மை நடக்கும். இன்று லட்சுமி தேவியை வணங்கி வர சிறப்பான நாளாக அமையும் என்ற அதிர்ஷ்ட எண் 2.
ஜோதிட ஆன்மீக தகவல்:
ரூபி அல்லது மாணிக்கம் இந்த கல் நவகிரகத்தில் சூரியனுக்கு உரியது இந்த ரத்தினத்தை ஆண்களும் பெண்களும் வலது கையில் மோதிரவர்கள் அணிய வேண்டும் ஜாதகத்தில் சூரியன் நீச்சமாகவோ அல்லது வக்கிரமாகவோ அமைந்தால் இந்த ரத்தினத்தை அணிவது மிகவும் உத்தமம் இதை வெள்ளி அல்லது தங்கத்தில் செய்து அணியலாம் மற்றும் தந்தை வழி உறவினர்கள் அரசாங்க உத்தியோகம் போன்றவற்றுக்கு இந்த ரத்தினத்தை அணிந்தால் சகல காரியத்திலும் வெற்றி பெறலாம் மீண்டும் நாளை சந்திப்போம் நன்றி வணக்கம்.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *