International Mountain Day: உலக மலைகள் தினம் …

Advertisements

ஆண்டு தோறும் டிசம்பர் 11 – ம் நாளை சர்வதேச மலை நாள் கொண்டாடப்படுகிறது.

சர்வதேச நாள் என்பது ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பானது முன்னின்று நடத்தி வருகிறது. இந்த மலை நாளானது மலைகளைப் பாதுகாக்கவும் , மலைப்பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் , மலையின் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் 2002 – ஆம் ஆண்டில் ” மலைகளின் கூட்டாளி ” என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.

இந்திய மலைகள்;

இந்திய நாட்டின் அரணாக இமயமலை விளங்குகின்றன. இமயத்தைத் தொடர்ந்து மேற்குத் தொடர்ச்சி மலைகள்  மிக முக்கியமான இடத்தை வகிக்கின்றன. பண்பாட்டுத் தொன்மையை இன்றும் தன்னகத்தே வைத்து பிரமிக்க வைக்கும் நீலகிரி, நமது பண்பாட்டை பறைசாற்றும் குறிஞ்சியைத் தன்னகத்தே  கொண்டது. இன்றைய நீலகிரி மலையானது தனது தொன்மை குறைந்த பன்மை பெருக்கத்தால் இயற்கை சீற்றமும், செயற்கை மாற்றமும் தரும் பெரும் பாதிப்பைச் சந்தித்து வருகிறது.

மலைகள் என்பது ஒரு நாட்டின் வேலியாக, இயற்கையின் வனப்பாக திண்ணம் மிக்க கம்பீரம் பொருந்திய கட்டமைப்பைக் கொண்டவையாகத் திகழ்கின்றன. இயற்கைச் சீற்றத்தைத் தடுக்கும் பாதுகாவலனாக, தூய காற்றுத் தரும் வள்ளலாக … மனிதனுக்கு மலைகள் தரும் பரிசுகள் பலப்பல.  வணங்கா முடியாக நிமிர்ந்து நின்று தன் கீழ் வாழும் உயிரினங்களைக் காக்கும் நிழல் தரும் பெருங் குடையாகவும் பொழுது போக்கைக் கொண்டாடும் பூலோகச் சொர்கமாகவும் , வளம் கொழிக்கும் விவசாயத்தின் ஆதாரமாகவும் , உணவு உற்பத்தியின் இடமாகவும்  , உள்ளம் மகிழும் நிலமாகவும் இருந்து நன்மைகள் பல நல்கி நலம் காண்கிறது.

மலைகள் அழியும் நிலை;

விவசாய முறையின் மாற்றம், செயற்கை முறையின் தாக்கம்  பழமை முறையை கடைபிடிக்காமை, இயற்கை முறையை பின் தோடராமை, தாவர அழிப்பு , மரம் வெட்டுதல் ,வேட்டையாடுதல், ஆகியவை மலைவாழ் உயிரினங் களுக்கும் மண்ணுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. தற்போது அதிகமான நிகழ்வாக பனிப்பாறை உருகுதல், கடல் மட்டம் உயர்தல் போன்ற வையும் அழிவுறக் காரணமாக உள்ளது.மரங்களை வெட்டுவதன் காரணமாக கார்பன் – டை – ஆக்சைடு அளவு வளி மண்டலத்தில் அதிகரித்து பல பிரச்சனைகளை   உண்டாக்குகிறது. இந்த விளைவின் தாக்கத்தைக் தடுக்கும வழிமுறைகளைப் பின்பற்றியும், தாவர உலக த்தைப் பாதுகாத்தும் மலையின் நலத்தை காப்போம் ! அகிலம் நிலைக்க  மலையைக் காப்போம்.! மாநிலம் செழிக்க மலையைக் காப்போம்.!

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *