எடப்பாடி பழனிசாமி முதுகில் குத்திவிட்டார் – பிரேமலதா விஜயகாந்த்

Advertisements

சென்னை தி.நகரில் நடந்த தேமுதிக பூத் கமிட்டி கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்றார். கூட்டத்தில் அவர் பேசும்போது, எடப்பாடி பழனிசாமி நம்மை முதுகில் குத்திவிட்டார் என பேசியுள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கிறது. இதற்காக அனைத்து கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. திமுக தலைமையிலான கூட்டணி அப்படியே தொடரும் என்றும், புதிய கட்சிகள் வரவும் வாய்ப்புள்ளது என்றும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில், இன்று சென்னை தி.நகரில் நடந்த தேமுதிக பூத் கமிட்டி கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்றார். கூட்டத்தில் அவர் பேசும்போது, எடப்பாடி பழனிசாமி நம்மை முதுகில் குத்திவிட்டார் என பேசியுள்ளார்.கூட்டத்தில் அவர், வாக்குறுதி கொடுத்துவிட்டு எடப்பாடி பழனிசாமி ஏமாற்றிவிட்டார் என்பது உண்மைதான்.

மாநிலங்களவை சீட் தருவதாக கூறி எடப்பாடி பழனிசாமி நமது முதுகில் குத்திவிட்டார். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் கூட்டணி குறித்த ஒப்பந்தங்களில் தேதி குறிப்பிட்டு கையெழுத்திட்டதில்லை. அதுபோலவே தேமுதிகவும் கையெழுத்திட்டது. எடப்பாடி பழனிசாமி காசு கொடுத்துதான் தனது பிரச்சாரத்திற்கு ஆட்கள் அழைத்து வரப்படுகிறார்கள் என பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *