Today Rasi Palan: இன்றைய ராசிப்பலன் – 18.04.2024

Advertisements

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு  நல்ல நாளாகத்தான் அமையும். எனினும்  பேசும்போது பொறுமையை கடைபிடியுங்கள். உங்கள் வாழ்க்கை துணையிடம் நிதானமாகப் பேசுங்கள் கருத்து வேறுபாடு வர வாய்ப்பு உண்டு. செலவுகள் அதிகமாக இருக்கும். முக்கிய பணிகளில் மட்டும் உங்களுடைய நேரத்தைச் செலவிடுங்கள். தேவையில்லாத விஷயத்தில் நேரம் செலவிடுவதால் உங்கள் பணியில் உள்ளவர்களிடம் தேவையில்லாத மனஸ்தாபம் ஏற்ப்பட வாய்ப்பு உள்ளது.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு  சிறந்த நாளாக அமையும்.  உங்களுடைய கடன்கள் நிவர்த்தி ஆகும். நிதி நிலைமை மேம்படும்.முடிவெடுப்பதில் பெற்றோரின் ஆலோசனை அவசியம் பெற வேண்டும். நீங்கள் வேலையில் ஆர்வமும் உறுதியையும் வெளிப்படுத்தும்போது வேலையில் உங்களுக்கென்று ஒரு மதிப்பும் ஆதாயமும் கிடைக்கும்.  உங்கள் வாழ்க்கை துணை உங்களிடம் அன்பை அதிகம் வெளிப்படுத்துவார். உடல் ஆரோக்கியம் மேம்படும்.

 

மிதுனம்

மிதுனம் ராசிக்காரர்களுக்கு  நல்ல நாளாக அமையும்.  அதிக உறுதியுடன் செயல்படுவீர்கள். உங்கள் வாழ்க்கை துணையிடம் அதிக அன்பை வெளிப்படுத்துவீர்கள்.  அதிக செலவுகள் செய்ய வாய்ப்பு உள்ளது. உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். பணம் விஷயத்தில் யோசித்து செயல்ப்படுங்கள். பொழுது போக்கிற்காகவும் நேரத்தைச் செலவிடுவீர்கள்.

 

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு எதிலும் கவனம் தேவை. உங்கள் உடல் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்துங்கள். உங்கள் வாழ்க்கை துணையிடம் உணர்வுரீதியாக எந்த வாக்குவாதமும் செய்யாதீர்கள். வேலையில் கடின உழைப்பும் உறுதியம் காட்டும்போது நிச்சயமாகப் பலன் அடைவீர்கள். செலவுகளைக் குறைக்க பாருங்கள். வேலையில் கவனம் தேவை.

 

சிம்மம்

 

சிம்ம ராசிக்காரர்களுக்கு  மன அமைதியை எதிர்பார்க்கும் நாளாக அமையும். உடல் சோர்வாகவும் மனதில் மன அழுத்தமும் உண்டாகும். செலவுகள் அதிகம் செய்யாதீர்கள். பணியில் உங்களுடைய சக்தியும் உழைப்பும் அதிகரிக்கும் நாளாகும். உங்களுக்கும் உங்கள் வாழ்க்கை துணையிக்கும் உண்டான பேச்சுவார்த்தையில் மற்றவர்கள் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். முக்கியமான முயற்சிகளுக்கு வீட்டில் உள்ளவர்களிடமும் ஆலோசனை பெறுவது நல்லது.

 

கன்னி

 

 

கன்னி ராசிக்காரர்களுக்கு  உங்களுக்கு எதிலும் கவனம் தேவை. உங்களுடைய கவலையும் மன அழுத்தமும் உங்கள் உடல் ஆரோக்கியத்தை கெடுக்கலாம். அதனால் மனதில் உண்டான கவலைகளைத் தவிர்த்துடுங்கள். எந்த ஒரு விஷயத்திலும் ஈடுபடுமுன் அதனை முழுமையாகத் தெரிந்து செயல்படுவது நல்லது. உங்கள் வாழ்க்கை துணையிடம் அன்பை வெளிப்படுத்துவதன் மூலம் மகிழ்ச்சி தரும் நாளாக அமையும்.

 

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு  சுமாரான  நாளாக அமையும். உங்கள் வாழ்க்கை துணையின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். மற்றவர்களுடன் பேசும்போது நிதானமாகப் பேசுங்கள்.  உங்கள் வாழ்க்கை துணையின் உடல் நிலையை நினைத்து நீங்கள் கவலையடைவீர்கள். உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தைச் செலவிடுவீர்கள். பணத்தை அதிகம் செலவு செய்யாமல் இருப்பது நல்லது.

விருச்சிகம்

விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு உடல் சோர்வு உள்ள நாளாக அமையும். பணியில் உங்கள் சீனியர்களால் மன அழுத்தத்தை உணர்வீர்கள். அதனால் வேலையில் கவனம் சிதறும். அதிக லாபம் பெரும் வாய்ப்பும் உண்டு. உங்கள் வாழ்க்கை துணை  சிறப்பானதாக மாற்றுவார். உங்களால் முடியும் என்று உறுதியாய் தெரிந்தால் மட்டும் வாக்குகளைக் கொடுங்கள்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு  உகந்த நாளாக அமையும். நீண்ட நாட்களாக இருந்த மன அழுத்தத்திலிருந்து விடுபடுவீர்கள்.  செலவுகள் அதிகரிக்கும் அதே சமயம் லாபமும் அடைவீர்கள். வீட்டில் நிலுவைப்பட்ட வேலைகளை  முடித்துவிடுவீர்கள்.  உங்கள் வாழ்க்கை துணையுடனான அன்பு அதிகரிக்கும். முக்கியமான முடிவுகள் எடுக்காதீர்கள்.

 

மகரம்

மகரம் ராசிக்காரர்களுக்கு  நல்ல நாளாக அமையும். உங்கள் உடல் ஆரோக்கியம் மேம்படும். உங்கள் பெற்றோரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் அதிகம் தேவை. உங்கள் வாழ்க்கை துணை உங்களுடைய சந்தோச படுத்துவார். உங்கள் பணியைச் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். அனுபவம் நிறைந்த நபர்களின் அலையோசனையை பெறுவது நல்லது.

 

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு  எதிலும் கவனம் தேவை. பண விஷயத்தில் பண இழப்பு நேரிட வாய்ப்பு உள்ளது. கவலையான உங்கள் நாட்களை நீங்கள் உங்கள் குடும்ப உறவினர்களின் வருகையால் நல்லதாக அமையும். வாகனம் ஓட்டும்போது அதிக கவனம் தேவை. வேலையில் கடின உழைப்பும் தேவைப்படும். எல்லாவற்றிலும் சிந்தித்து செயல்படுங்கள்.

 

மீனம்

 

மீன ராசிக்காரர்களுக்கு  சிறந்த நாளாக அமையும். நீண்ட நாட்களாக இருந்த நோயிலிருந்து குணமாவீர்கள். நீங்கள் செலுத்திய முதலீட்டிலிருந்து லாபம் பெரும் வாய்ப்பு உள்ளது. உங்கள் வாழ்க்கை துணையிடம் அன்பை வெளிப்படுத்துவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் தேவையை அறிந்து செயல்படுவது இன்னும் சிறப்பாக இருக்கும்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *