Divyabharathi: ஒல்லி பெல்லி இடையை காட்டி இளசுகளை கவரும் திவ்ய பாரதி!

Advertisements

பேச்சிலர் பட நடிகை திவ்ய பாரதி, டிரான்ஸ்பரெண்ட் சேலையில் இடையழகு தெரிய போஸ் கொடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஜிவி பிரகாஷின் பேச்சிலர் படம்மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் திவ்ய பாரதி. கோவையைச் சேர்ந்தவரான இவர் முதல் படத்திலேயே தன்னுடைய இயல்பான நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். பேச்சிலர் படத்தின் வெற்றிக்குப் பின்னர் அவருக்குப் பட வாய்ப்புகளும் குவிந்த வண்ணம் உள்ளன.

இதையடுத்து பிக்பாஸ் பிரபலம் முகென் ராவுக்கு ஜோடியாக மதில்மேல் காதல் என்கிற ரொமாண்டிக் திரைப்படத்தில் நடித்தார் திவ்ய பாரதி. வெப்பம் படத்தின் இயக்குனர் அஞ்சனா இயக்கியுள்ள இப்படம் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. இதுதவிர மேலும் ஒரு படத்திலும் நடித்து முடித்துள்ளார் திவ்ய பாரதி.

அந்தப் படத்தின் பெயர் ஆசை. இப்படத்தில் பரியேறும் பெருமாள் படத்தின் நாயகன் கதிருக்கு ஜோடியாக நடித்துள்ளார் திவ்ய பாரதி. இது மலையாளத்தில் வெளியாகி வெற்றிபெற்ற இஸ்க் என்கிற திரைப்படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். இப்படமும் இந்த ஆண்டு இறுதிக்குள் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்ததாக நடிகை திவ்ய பாரதி கைவசம் கிங்ஸ்டன் திரைப்படம் உள்ளது. இப்படத்தில் நடிகர் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார் திவ்ய பாரதி. இப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளது மட்டுமின்றி படத்தைத் தயாரித்தும் வருகிறார் ஜிவி பிரகாஷ். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சினிமாவில் பிசியாக இருந்தாலும் இன்ஸ்டாகிராமில் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை அவ்வப்போது பதிவிட்டு லைக்குகளையும் அள்ளி வருகிறார் திவ்ய பாரதி. அந்த வகையில் தற்போது சேலையில் அவர் நடத்தி இருக்கும் கவர்ச்சி போட்டோஷூட் செம்ம வைரலாகி வருகிறது.

அந்தப் போட்டோஷூட்டில் நீல நிற கொசுவலை போன்ற மெல்லிய சேலையில், இடையழகு தெரிய விதவிதமாகப் போஸ் கொடுத்துள்ளார் திவ்ய பாரதி. அந்தப் போட்டோஷூட்டுக்கு லட்சக்கணக்கில் லைக்குகளும் குவிந்த வண்ணம் உள்ளன.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *