Crime: மகளை கொன்று விட்டு தந்தை, மகன் தற்கொலை!

Advertisements

சேலம் அம்மாபேட்டையில் மகளை கொன்று தந்தை, மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.முதற்கட்ட விசாரணையில், கடன் பிரச்னை காரணமாக மகளை கொன்று தந்தை, மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

சேலம் மாசிநாயக்கன்பட்டி இந்திரா நகரை சேர்ந்தவர் வெங்கடேஷ்வரன் (54). இவரது மனைவி நிர்மலா (50). இவருக்கு ரிஷி கேசவன் (30) என்ற மகனும், பூஜா (23) என்ற மகளும் இருந்தனர். இதில் ரிஷி கேசவன் பி.இ. முடித்துவிட்டு தந்தையுடன் கெமிக்கல் தொழில் செய்து வந்தார். இவரது மகள் பூஜா பிகாம் முடித்துவிட்டு சி.ஏ. படித்து வந்தார்.

இதனிடையே நிர்மலா தனது உறவினரின் குழந்தையைப் பார்ப்பதற்காகச் சீலநாயக்கன்பட்டி சென்றிருந்தார். அப்போது வெங்கடேஷ்வரன், மகன், மகள் ஆகியோர் மட்டும் வீட்டில் இருந்தனர்.
பின்னர் உறவினர் குழந்தையைப் பார்த்துவிட்டு வீடு திரும்பியபோது மகள் பூஜா கழுத்தில் காயத்துடன் கட்டிலில் இறந்து கிடந்தார். கணவர் வெங்கடேஷ்வரன், மகன் ரிஷி கேசவன் ஆகியோர் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதுகுறித்து அம்மாபேட்டை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காகச் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், கடன் பிரச்னை காரணமாக மகளைக் கொன்று தந்தை, மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாமெனக் கூறப்படுகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *