Today Rasi Palan: இன்றைய ராசிப்பலன் – 03.10.2023

Advertisements

இன்றைய ராசிப்பலன் – 03.10.2023

 

இன்றைய பஞ்சாங்கம்

03-10-2023, புரட்டாசி 16, செவ்வாய்க்கிழமை, சதுர்த்தி திதி காலை 06.12 வரை பின்பு பஞ்சமி திதி பின்இரவு 05.33 வரை பின்பு தேய்பிறை சஷ்டி. கிருத்திகை நட்சத்திரம் மாலை 06.03 வரை பின்பு ரோகிணி. சித்தயோகம் மாலை 06.03 வரை பின்பு அமிர்தயோகம். கிருத்திகை விரதம். முருக வழிபாடு நல்லது. கரி நாள். புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்.

இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

மேஷம்


இன்று நீங்கள் எந்தச் செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். திருமண முயற்சிகளில் தாமத நிலை ஏற்படக்கூடும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் குறைந்து முன்னேற்றம் ஏற்படும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

ரிஷபம்


இன்று குடும்பத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். சகோதர, சகோதரிகள் வழியில் அனுகூலம் கிட்டும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்குத் தகுதிக்கு ஏற்றப் பதவி உயர்வு உண்டாகும். தொழிலில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாகச் செயல்பட்டு லாபம் அடைவீர்கள். வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.

மிதுனம்


இன்று குடும்பத்தில் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். உத்தியோக ரீதியான பயணங்களால் அலைச்சல், உடல் அசதி ஏற்படும். தொழில் வியாபாரத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலங்கள் உண்டாகும். தெய்வ வழிபாடு செய்வது நல்லது.

கடகம்


இன்று இல்லம் தேடி இனிய செய்திகள் வந்து சேரும். உத்தியோகத்தில் எதிர்பாராத வகையில் புதிய மாற்றங்கள் உண்டாகும். உறவினர்களுடன் இருந்த பிரச்சினைகள் குறையும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன்கள் கிட்டும். தொழில் ரீதியான நவீன கருவி வாங்கும் முயற்சிகள் வெற்றியைத் தரும்.

சிம்மம்


இன்று எந்தக் காரியத்திலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உற்றார் உறவினர் வருகையினால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் கிட்டும். தொழில் ரீதியாக வெளிவட்டார நட்பு ஏற்படும். சேமிப்பு உயரும்.

கன்னி


இன்று உங்களுக்குப் பணவரவு சுமாராக இருந்தாலும் உங்கள் தேவைகள் நிறைவேறும். பிள்ளைகளால் தேவையற்ற வீண் செலவுகள் ஏற்படலாம். உத்தியோகஸ்தர்கள் வேலையில் மேலதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் வீண் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். எதிலும் கவனம் தேவை.

துலாம்


இன்று நீங்கள் சற்று குழப்பத்துடனும் மன உளைச்சலுடனும் காணப்படுவீர்கள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்தச் செயலிலும் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். வெளி நபர்களிடம் அதிகம் பேசாமல் இருந்தால் வீண் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

விருச்சிகம்


இன்று பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வீடு வந்து சேரும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் நற்பலன்களை தரும். சுபகாரியங்கள் கைகூடும். உத்தியோகத்தில் இதுவரை இருந்த மறைமுக எதிர்ப்புகள் குறையும்.

தனுசு


இன்று வியாபாரத்தில் உங்களின் மதிப்பும் மரியாதையும் மேலோங்கி இருக்கும். வேலையில் மிகக் கடினமான காரியத்தைக் கூட எளிதில் செய்து முடிக்கும் துணிச்சல் உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நிகழக்கூடிய சூழ்நிலை உருவாகும். திடீர் பணவரவு கிடைத்து கடன்கள் குறையும்.

மகரம்


இன்று குடும்பத்தில் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். உறவினர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். தொழில் வியாபாரத்தில் மறைமுக பிரச்சினைகள் வந்தாலும் லாபம் பாதிப்படையாது. சிக்கனமாகச் செயல்படுவது நல்லது. நண்பர்கள்மூலம் உதவிகள் கிடைக்கும்.

கும்பம்


இன்று நீங்கள் புது பொலிவுடனும், உற்சாகத்துடனும் காணப்படுவீர்கள். நண்பர்கள்மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். திருமணம் சம்பந்தமான சுபகாரியங்களில் சாதகமான பலன்கள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படும்.

மீனம்


இன்று வீட்டில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் உண்டாகும். திடீர் உதவிகள் கிடைக்கப்பெற்று ஆனந்தம் அடைவீர்கள். நவீன பொருறீ;யீள் வாங்கும் வாய்ப்பு அமையும்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *