
இன்றைய ராசிப்பலன் – 17.09.2023
மேஷம்

இன்று இல்லம் தேடி இனிய செய்திகள் வந்து சேரும். சகோதர சகோதரிகளுடன் இருந்த மன சங்கடங்கள் விலகி ஒற்றுமை கூடும். பிள்ளைகளால் சுபசெலவுகள் உண்டாகும். நண்பர்கள்மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கடன்கள் குறையும்.
ரிஷபம்

இன்று குடும்பத்தில் உள்ளவர்களிடம் தேவையற்ற வாக்குவாதம் ஏற்படும். உடல் ஆரோக்கிய ரீதியாகச் சிறு உபாதைகள் ஏற்படலாம். எடுக்கும் முயற்சிகளில் பல இடையூறுகளைச் சந்திக்க நேரிடும். பொறுமையாக இருந்தால் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். நண்பர்களால் அனுகூலங்கள் உண்டாகும்.
மிதுனம்

இன்று உங்களுக்குப் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படும். வியாபாரத்திலும் எதிர்பாராத செலவுகள் தோன்றும். உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். எந்த ஒரு விஷயத்திலும் போராடி வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் சற்று குறையும். தெய்வ வழிபாடு நல்லது.
கடகம்

இன்று உங்களுக்குப் புது நம்பிக்கையும், தெம்பும் உண்டாகும். குடும்பத்தில் பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். உடல்நிலை சீராகும். குடும்பத்தோடு தெய்வ தரிசனத்திற்காக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும்.
சிம்மம்

இன்று உடன் பிறந்தவர்களால் வீண் பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடும். பிள்ளைகளின் ஆரோக்கியத்திற்காகச் செலவிட நேரிடும். சுபகாரிய முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலமான பலன்கள் கிட்டும். பழைய நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும்.
கன்னி

இன்று பணவரவு தாராளமாக இருக்கும். நினைத்த காரியம் நிறைவேறும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய முயற்சிகளில் அனுகூலப் பலன் கிட்டும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் விலகும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும்.
துலாம்

இன்று உங்களுக்குப் பணவரவு சுமாராக இருக்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் கூடும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டுக் கொடுத்துச் சென்றால் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். கடன்கள் சற்று குறையும். தெய்வ வழிபாடு மனதிற்கு நிம்மதியை தரும்.
விருச்சிகம்

இன்று எந்த ஒரு செயலிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். நண்பர்கள்மூலம் சுப செய்திகள் வந்து சேரும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தொழில் வளர்ச்சிக்காகப் புதிய திட்டங்கள் போட்டு வெற்றி அடைவீர்கள். வருமானம் லாபகரமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
தனுசு

இன்று உங்களுக்கு ஆரோக்கிய பாதிப்புகள் குறைந்து சுறுசுறுப்புடன் இருப்பீர்கள். உடன் பிறந்தவர்களுடன் இருந்த மனஸ்தாபங்கள் மறைந்து ஒற்றுமை நிலவும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிட்டும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.
மகரம்

இன்று பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். நண்பர்களால் மன நிம்மதி குறையும். திருமண முயற்சிகளில் தடைகள் ஏற்படலாம். சிக்கனமாகச் செயல்படுவதன் மூலம் பண பற்றாக்குறையை தவிர்க்கலாம். பெரியவர்களின் ஆதரவு மனதிற்கு நம்பிக்கையைத் தரும்.
கும்பம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் அறிமுகம் இல்லாத நபர்களிடம் தேவை இல்லாமல் பேசுவதை தவிர்ப்பது உத்தமம். வியாபாரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது. வாகனங்களில் செல்லும்பொழுது எச்சரிக்கை வேண்டும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
மீனம்

இன்று பிள்ளைகளால் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தில் செலவுகள் கட்டுக்கடங்கி இருக்கும். பெற்றோரிடம் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் தாமதமின்றி கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப்பலன் கிட்டும்.

