Today Rasi Palan – இன்றைய ராசிபலன் – 21.09.2024

Advertisements

Today Rasi Palan – 21.09.2024

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்
இன்றைய பஞ்சாங்கம்:

குரோதி வருடம் புரட்டாசி மாதம் 5ம்- தேதி சனிக்கிழமை

நட்சத்திரம் : இன்று காலை 08.03 அஸ்வினி வரை பின்பு பரணி

திதி : இன்று அதிகாலை 1.58 வரை சதுர்த்தி, பின்பு பஞ்சமி

யோகம் : சித்த யோகம்

நல்ல நேரம் காலை : 07.45 – 08.45

நல்ல நேரம் மாலை : 03.15 – 4.15

ராகு காலம் காலை : 9.00 – 10.30

எமகண்டம் மாலை : 1.30 – 3.00

குளிகை காலை : 6.00 – 7.30

கௌரி நல்ல நேரம் காலை : 10.45 – 11.45

கௌரி நல்ல நேரம் மாலை : 9.30 – 10.30

சூலம் : கிழக்கு

சந்திராஷ்டமம் : உத்திரம்

இன்றைய ராசிபலன்:

மேஷம்


விற்பனையாளர்கள் சாதுர்யமாகப் பேசி விற்பனையைக் கூட்டுவர். குடும்பத்துடன் வெளிநாடு சுற்றிப் பார்க்கத் திட்டமிடுவர். வீடு கட்ட கடன் வசதி கிடைக்கும் காதல் கசக்கும். விளையாட்டு வீரர்கள் பதக்கம் பெற்று தாய்நாடு திரும்புவர். பெண் வியாபாரிகள் லாபத்தை காண்பர். உடல் நலம் சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

ரிஷபம்


மார்கெட்டிங்பிரிவினர் அதிக ஆர்டர்கள் பெறுவர். கணினி துறையில் இருப்பவர்களுக்குச் சம்பள உயர்வு கிடைக்கும். தம்பதிகள் ஒருவருக்கொருவர் புரிந்துகொள்வர். வாகன பராமரிப்பு செலவு ஏற்படும். வெளியூர் பயணம் வெற்றி தரும். குலதெய்வ வழிபாடுகளில் ஈடுபடுவர். உடல்நிலை நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

மிதுனம்


சுப காரியம் கைகூடும். நண்பர்களிடம் தங்கள் அந்தரங்க விசயத்தைப் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது அனைத்து விதத்திலும் நல்லது. தெய்வீகப் பணிகளில் ஈடுபடுவீர்கள். தாயார் தங்களுக்கு உதவிகரமாக இருப்பார். கணவன்-மனைவிக்குள் மனம் விட்டுப் பேசிச் சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் : ஊதா

கடகம்


வியாபாரத்தில் கிளைகள் துவங்குவர். வாகனத்தில் கவனம் தேவை. பிள்ளைகளின் நினைவாற்றல் கூடும். தந்தைவழி சொத்துக் கைக்கு வரும். கடவுள் நம்பிக்கை அதிகரிக்கும். வெளியூர் செல்வதில் திட்டங்கள் மாறும். உத்யோகஸ்தர்கள் அதிகாரிகளிடம் பாராட்டைப் பெறுவர். உடல் நலம் பளிச்சிடும்.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

சிம்மம்


இன்று தங்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் பயணங்கள் மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது. காரணம் அந்தப் பயணங்களால் சிறு சிறு விபத்துகள் அல்லது காரியத் தடை ஏற்படலாம். ஆதலால், இதனால் நேரமும் பணவிரையமும் ஏற்படும். ஆதலால், இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

கன்னி


வியாபாரம் லாபகரமாகச் செல்லும். வெளிநாட்டுத் தொடர்பால் நன்மைகள் கூடும். கல்யாணம், கிரகப் பிரவேசத்தில் முதல் மரியாதைக் கிடைக்கும். நடைபாதை வியாபாரிகளுக்குப் பணவரவு அதிகரிக்கும். கடன் அன்பை முறிக்கும். ஆதலால், கொடுக்கல் வாங்கலில் கவனம். நண்பர்கள், உறவினர்கள் தேடி வந்துப் பேசுவார்கள்.

அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்

துலாம்


பிள்ளைகள் நீண்ட நாள் கேட்டுக் கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள். வங்கியில் நீங்கள் விரும்பிய வீடு கட்ட எதிர்பார்த்த பணம் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறைத் தேவை. தம்பதியரிடையே அன்பு மேலோங்கும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும்.

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

விருச்சிகம்


உத்யோகஸ்தர்களுக்கு நிர்வாகத்திறன் மேம்படும். நினைத்த காரியம் வெற்றி பெறும். புதிய நண்பர்கள் அறிமுகமாவர். உடன்பிறந்தவர்கள் அன்புடன் நடந்து கொள்வர். சிறு வியாபாரிகளுக்கு விற்பனை மிகும். பெரிய விசயங்கள் சட்டென்று முடியும். பணவரவு திருப்தி தரும். எதிர்பார்த்த ஒரு நற்செய்தி வரும்.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

தனுசு


பொதுநலத் தொண்டாளர்களுக்கு பெரிய பதவிகள் தேடி வரும். கை, கால் வலி வந்துப் போகும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். தம்பதிகளிடையே மனஸ்தாபம் ஏற்படும். விட்டுக் கொடுத்துச் செல்லவும். மூத்த சகோதரி வகையில் உதவிகள் உண்டு. குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக்கூடும்.

அதிர்ஷ்ட நிறம் : வான்நீலம்

மகரம்


மார்க்கெட்டிங் பிரிவினர்கள் தங்கள் இலக்கை எட்டுவீர்கள். உத்யோகஸ்தர்கள் சக ஊழியர்களிடம் அனுசரிப்பது நல்லது. ஆவணங்களைப் பாதுகாப்பீர்கள். உடல்நிலையில் சிறு பாதிப்பு வரலாம். குறித்த நேரத்தில் உணவு உட்கொள்ளுங்கள். பெண்கள் சுயதொழிலில் முன்னேற்றம் காண்பர். விருந்து விழா என்று கலந்து கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் : ரோஸ்

கும்பம்


வியாபாரிகளுக்கு இயல்பு லாபம் நிச்சயம். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மதிப்பார்கள். மாணவர்கள் காதலில் சிக்கிக் கொள்ளாமல் பார்த்துக் கொள்வது நல்லது. வெளிநாடு பயணம் மேற்கொள்வீர்கள். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வீட்டை அலங்கரிப்பீர்கள். திடீர் பயணங்கள் வந்துப் போகும். ஒரு சிலர் நவீன வாகனம் வாங்குவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் : கிளிப்பச்சை

மீனம்


உத்யோகஸ்தர்களுக்கு வேலை அதிகரிக்கும். வழக்கில் திருப்பம் ஏற்படும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து கொண்டு அத்தியாவசியத்தை மட்டும் செய்யப்பாருங்கள். பிள்ளைகளின் எதிர்காலம்குறித்த கவலைகள் அவ்வப்போது வரும். திருமண பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். மகான்கள், சித்தர்களின் ஆசி கிட்டும். ஷேர் மூலம் பணம் வரும்.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *