Today Rasi Palan -இன்றைய ராசிபலன் – 28.09.24

Advertisements

Today Rasi Palan -28.09.24

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்
இன்றைய பஞ்சாங்கம்:

குரோதி வருடம் புரட்டாசி மாதம் 12ம்- தேதி சனிக்கிழமை

நட்சத்திரம் : இன்று காலை 05.29 வரை பூசம் பின்பு ஆயில்யம்

திதி : இன்று மாலை 6.09 வரை ஏகாதசி பின்பு துவாதசி

யோகம் : மரண யோகம்

நல்ல நேரம் காலை : 07.45 – 08.45

நல்ல நேரம் மாலை : 04.45 – 5.45

ராகு காலம் காலை : 9.00 – 10.30

எமகண்டம் மாலை : 1.30 – 3.00

குளிகை காலை : 6.00 – 7.30

கௌரி நல்ல நேரம் காலை : 10.45 – 11.45

கௌரி நல்ல நேரம் மாலை : 9.30 – 10.30

சூலம் : கிழக்கு

சந்திராஷ்டமம் : மூலம்

இன்றைய ராசிபலன்:

மேஷம்


பழைய பாக்கி வசூலாகும். திருமணம், சீமந்தம் என அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். விருந்தினர்கள், உறவினர்கள் வருகையும் அதிகரிக்கும். அவர்களால் நன்மையும் கிடைக்கும். இடுப்பு வலி மற்றும் மூட்டு வலி வந்து நீங்கும். பழைய உறவினர், நண்பர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து விலகும்.

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

ரிஷபம்


உத்யோகஸ்தர்களுக்கு வீட்டுக் கடன் கிடைக்கும். உடல் வலிமை உண்டாகும். சமூக ஆர்வலர்களுக்கு மக்கள் செல்வாக்கு கூடும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட மனஸ்தாபம் விலகும். உறவினர்களால் நன்மை உண்டு. அக்கம் பக்கத்தாரிடம் நட்பு பலப்படும். நண்பர்கள் ஒற்றுமையுடன் இருப்பர்.

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

மிதுனம்


தாய் வழி உறவினர்களால் மதிக்கப்படுவீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. புதியவர்களின் நட்பு கிடைக்கும். அவர்களின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். மறுக்காமல் செய்து கொடுப்பீர்கள். பூர்வீக சொத்து பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

கடகம்


நண்பர்களிடையே கலகலப்பான சூழல் உருவாகும். வேலைகள் தள்ளிப் போகும். மருத்துவ செலவு குறையும். பார்ட்னரிடம் பொறுமை அவசியம். மற்றவர்களுக்காகச் சில பொறுப்புகளை ஏற்பீர்கள். காதல் கண் சிமிட்டும். உறவினர்கள் வருகை உண்டு. பெற்றோர்களின் உடல் நலம் தேறும்.

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

சிம்மம்


மனைவி வழியில் உதவிகள் உண்டு. பழைய நண்பர்களிடமிருந்து விடுபடுவீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வாகனம், வீடு பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். உயர் ரக ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

கன்னி


கணவருடன் கருத்து மோதல்களும் வரக்கூடும். அனுசரிப்பது நல்லது. எதிர்பார்த்து ஏமாந்துபோன தொகை கைக்கு வந்து சேரும். தாயாரின் உடல்நிலை பாதிக்கும். கலைஞர்களுக்கு முன் பணம் கிடைக்கும். பிள்ளைகளின் வருங்காலம் குறித்த கவலைகள் நீங்கும். புகழ்பெற்ற புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

துலாம்


உத்யோகஸ்தர்களுக்கு வேலை பளு குறையும். வெளிநாட்டு வியாபாரத்தை விருத்தி செய்வீர்கள். தம்பதிகளிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். மறுமணத்திற்காகக் காத்திருப்பவர்களுக்கு நல்ல துணை அமையும். முகம் வசீகரம் அதிகமாகும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

அதிர்ஷ்ட நிறம் : ஊதா

விருச்சிகம்


பணவிசயங்களில் யாரையும் நம்ப வேண்டாம். உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். நண்பர்கள் உதவுவர். பெண்களுக்குத் திருமண முயற்சிகள் கைகூடும். பெற்றோரின் கனவு பலிக்கும். பழைய பிரச்சினைகளைத் தீர்ப்பீர்கள். ஆன்மீகச் சுற்றுலா சென்றுவருவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

தனுசு


இன்று சந்திராஷ்டமம் என்பதால் இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. காரணம் இன்று பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது. யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

மகரம்


நண்பர்கள் யாரிடமும் பகைத்துக் கொள்ள வேண்டாம். இதுநாள் வரை பேசாதவர்கள் மீண்டும் பேசுவர். பிள்ளைகள் தங்கள் பேச்சினை கேட்பர். பண வரவு தாமதப்படும். உத்தியோகத்தில் அமைதியான போக்கே உண்டாகும். உடல் ஆரோக்கியம் சீர்படும்.

அதிர்ஷ்ட நிறம் : கரும்பச்சை

கும்பம்


திருமணத்திற்காகக் காத்திருப்பவர்களுக்கு நல்ல துணை அமையும். உடல் ஆரோக்கியம் சீர்படும். யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். எதிரிகள் விலகுவர். பணவரவில் பஞ்சமில்லை. இதுநாள் வரை பேசாதவர்கள் மீண்டும் பேசுவர். பிள்ளைகள் தங்கள் பேச்சினை கேட்பர். உத்யோகத்தில் அமைதியான போக்கே உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

மீனம்


பயணங்களால் ஆதாயம் உண்டு. திருமணம் நடந்தேறும். உடல் உஷ்ணத்தால் பாதிக்கப்படும். உத்யோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். தம்பதிகளின் அன்பு மேலோங்கும். பழைய பிரச்சினைகளைத் தீர்ப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *