Donald trump:கூகுள் நிறுவனத்துக்கு எச்சரிக்கை விடுத்த டொனால்ட் டிரம்ப்! ஏன் தெரியுமா?

வாஷிங்டன்: ‘கூகுள் தேடுதலில், தன்னை பற்றி மோசமான விஷயங்கள் மட்டுமே காட்டுவதாகவும், அதிபராகப் பதவியேற்றால் அந்நிறுவனம் மீது வழக்கு தொடர்வேன்’ என்றும், குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிடும் டிரம்ப் கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டிரம்ப் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. பாலியல் வழக்கு, ஆபாச பட நடிகைக்குப் பணம் கொடுத்தல், 2020ம் ஆண்டு அதிபர் தேர்தல் முடிவுகளை மாற்ற முயற்சியென அவர்மீது தொடரப்பட்டுள்ள வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்நிலையில், ‘Donald Trump presidential race 2024.’ எனத் தேடினால் மோசமான விஷயங்கள் மட்டுமே வருவதாக அவரது பிரசார குழுவினர் தகவல் வருவதாக டிரம்ப் பிரசார குழுவினர் கூறியுள்ளனர்.

இதனையடுத்து டிரம்ப் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது; கூகுள் இணையதளத்தில் என்னைப் பற்றித் தேடினால், மோசமான விஷயங்கள் மட்டுமே காட்டுகிறது. ஆனால், ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரீஸ் பற்றி நேர்மறையான விஷயங்கள்பற்றி மட்டுமே காட்டப்படுகிறது. இது சட்டவிரோதமான நடவடிக்கை. இந்த விவகாரத்தில் நீதித்துறை தலையிடும் என நம்புகிறேன்.

இது நடக்காவிட்டால், அமெரிக்க சட்டப்படி நான் அதிபராகப் பதவியேற்றபிறகு கூகுள் மீது வழக்கு தொடர்வேன் எனக் கேட்டுக் கொள்வேன். இவ்வாறு அந்த அறிக்கையில் டிரம்ப் கூறியுள்ளார்.

கூகுள் மறுப்பு
ஆனால், இதனை மறுத்துள்ள கூகுள் நிறுவனம், தேடுதலில் கிடைக்கும் தகவலில் இருவரது பிரசார இணையதளங்களும் முதலிலேயே காட்டப்படுகிறது. எந்த வேட்பாளருக்கு ஆதரவாக முடிவுகள் காட்டும் வகையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *