
Today Rasi Palan – 23.10.2024
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்
இன்றைய பஞ்சாங்கம்:
குரோதி வருடம் ஐப்பசி மாதம் 6-ம் தேதி புதன்கிழமை
நட்சத்திரம்: இன்று காலை 11.48 வரை திருவாதிரை பின்பு புனர்பூசம்
திதி: இன்று காலை 07.21 வரை சஷ்டி பின்பு சப்தமி
யோகம்: சித்த யோகம்
நல்ல நேரம் காலை: 9.15 – 10.15
நல்ல நேரம் மாலை: 4.45 – 5.45
ராகு காலம் மதியம்: 12.00 – 1.30
எமகண்டம் காலை: 7.30 – 9.00
குளிகை காலை: 10.30 – 12.00
கௌரி நல்ல நேரம் காலை 10.45 – 11.45
கௌரி நல்ல நேரம் மாலை 6.30 – 7.30
சூலம்: வடக்கு
சந்திராஷ்டம்: விசாகம், அனுஷம்
இன்றைய ராசிபலன்:
மேஷம்

உத்யோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு உண்டு. காதல் கண்சிமிட்டும். கணவன்வழி உறவினர்களுடன் கருத்து மோதல்கள் வரும். பொறுமை மிக அவசியம். பிரபலமானவர்களால் நன்மை உண்டு. உங்களைச் சார்ந்து இருப்பவர்களின் நிலையினை உணர்ந்து உதவுவீர்கள். பொது நல சேவையில் நாட்டம் கூடும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
ரிஷபம்

பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். அரசியல்வாதிகளுக்கு இழந்த பதவி கிடைக்கும். வழக்கில் இழுபறிகள் நீங்கி நல்ல முடிவு ஏற்படும். மார்கெட்டிங் பிரிவினர்களுக்கு தாங்கள் தங்கள் இலக்கை எட்டுவீர்கள். புதியவர்களின் நட்பால் நன்மை உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
மிதுனம்

உத்தியோகத்தில் சலுகை கிடைக்கும். மாமியாரை சமையலில் அசத்துவீர்கள். நண்பர்கள் பக்கபலமாக இருப்பர்.அரசியலில் உள்ளவர்களுக்குப் பதவி உயர்வுண்டு. திருமணத்திற்காகப் பல ஆண்டுகளாகக் காத்திருப்பவர்களுக்கு நல்லதொரு மாப்பிள்ளை வந்து சேரும்.
அதிர்ஷ்ட நிறம்: ரோஸ்
கடகம்

ஆடம்பர செலவினை தவிர்ப்பது நல்லது. பணத்தை சிக்கனமாகப் பயன்படுத்தவும். குடும்ப வருமானத்திற்காக வீட்டில் உள்ள அனைவரும் அவரவர் பங்கிற்கு வேலை செய்வர். உத்யோகஸ்தர்களுக்கு வேலைபளு கூடும், அதற்கேற்ப சம்பளமும் அதிகம் உண்டு.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
சிம்மம்

உடல் நலத்தில் கவனம் தேவை. நல்ல மருத்துவரை நாடுவது நல்லது. உத்யோகஸ்தர்கள் வேலையை விரைவில் முடிப்பர். தேகத்தில் ஒருவித புத்துணர்ச்சியை உணர்வீர்கள். பண வரவுகளில் குறையில்லை. பெண்கள் தங்கள் குல தெய்வ திருவிழாக்களில் கலந்து கொள்ள தங்கள் கணவரின் சொந்த ஊருக்குச் சென்று வருவர்.
அதிர்ஷ்ட நிறம்: கிரே
கன்னி

குடும்பத்தில் உள்ளவர்கள் தாங்கள் செய்ய வேண்டிய நேர்த்திக்கடனான குல தெய்வப் பிரார்த்தனைகளை முடித்துவிடுவீர்கள். நேர்முகத் தேர்வை முடித்துவிட்டு அந்த வேலைக்காகக் காத்திருப்பவர்களுக்கு இன்று ஒரு முடிவு வெளியாகும். தேகம் பளிச்சிடும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
துலாம்

சில அத்தியாவசிய காரியங்கள் தாமதமாகும். பண விஷயத்தில் சிக்கனம் தேவை. யோகாவில் மனம் லயிக்கும். ஆன்மீக பணிகளில் ஆர்வம் உள்ளவர்களுக்குச் சுபிட்சம் காண்பர். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. அலுவலகத்தில் அமைதி உண்டாகும். மாணவர்களுக்கு நினைவாற்றல் கூடும்.
அதிர்ஷ்ட நிறம்: கரும் பச்சை
விருச்சிகம்

இன்று சந்திராஷ்டமம் என்பதால் இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. காரணம் இன்று பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது. யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: கடல் நீலம்
தனுசு

வியாபாரிகளுக்கு வெளிநாட்டின் தொடர்பு உண்டாகும். அதன் மூலம் வியாபாரம் பெருகும். வகுப்பில் தங்களுக்கு வைக்கப்படும் டெஸ்ட்களில் நல்ல மதிப்பெண்களை எடுப்பர். குடும்பத் தலைவிகள் அக்கம் பக்கம் வீட்டாரிடம் இன்முகத்துடன் பழகுவது நல்லது. முடிந்தவரை அவர்களிடம் அதிகமாகப் பின்னிப் பிணைய வேண்டாம்.
அதிர்ஷ்ட நிறம்: ரோஸ்
மகரம்

தம்பதிகளிடையே அன்பு இரட்டிப்பாகும். காதல் கசக்கும். பிள்ளைகளிடம் கவனமாக இருப்பது நல்லது. திருமண நிச்சயர்தார்த்தம் நடக்கும். மாணவர்கள் தங்கள் தேவைகளைப் பூர்த்திச் செய்து கொள்ள பகுதி நேர வேலைக்குச் செல்வர். மார்கெட்டிங் பிரிவில் உள்ளவர்களுக்குத் தங்களது சக ஊழியர்களின் ஆதரவுப் பெருகும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
கும்பம்

வீட்டிற்கு தேவையான மளிகைப் பொருட்களை வாங்குவீர்கள். தம்பதிகள் விருந்து விழா எனக் கலந்து கொள்வர். பெண்களுக்கு இடுப்பு வலி வந்து போகும். உடற்பயிற்சி செய்வது நல்லது. பெரியவரின் ஆசியும் அவர்களின் ஆலோசனையும் தங்களுக்கு கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வான் நீலம்
மீனம்

தொழில் சூடு பிடிக்கும். பங்கு சந்தையில் சில மாற்றங்கள் செய்வீர்கள். வியாபாரிகளுக்கு விற்பனை அதிகரிக்கும். வியாபாரிகள் வெளியூர் பயணங்கள் ஏற்படும். தம்பதிகளுக்குள் மனக்கசப்பு உண்டாகும். அவ்வப்போது பேசித் தீர்த்துக் கொள்வது நல்லது. மனதில் வைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்



