World Kindness Day: இன்று!

Advertisements

உலக கருணை நாள்*நவம்பர் 13 உலக கருணை நாள்,கருணை உள்ளமே கடவுள் வாழும் நெஞ்சமே..! என்பிலதனை வெய்யில் போலக் காயுமே அன்பி  லதனை அறம்…
எலும்பில்ல உயிர்களை வெயில் வாட்டுவது போல அன்பில்லாத உயிர்களை அறக்கடவுள் அழிக்கும்.

உள்ளத்தில் கருணை பிரவாகமாய் பொங்கி வழிந்தோட, தொழு நோயாளிகளை பராமரித்த அன்னை தெரசாவாகவோ, வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடிய வள்ளலார் ஆகவோ நம்மால் முடியாது போகலாம்.

அன்னை தெரசா அருட்பெர்ம் ஜோதி வள்ளலார் ஆகியோர்  உயிர்களிடத்தில் அன்பு செலுத்த வலியுறுத்தி அதற்கேற்றாற்றவாறு வாழ்ந்து சென்றவர்கள். உலக கருணை இயக்கம் 1998 ல் உருவாக்கப்பட்டது, இது மக்கள் ஒருவருக்கொருவர் தயவாகவும், , மகிழ்ச்சியையும், சமாதானத்தையும் பரப்புவதை ஊக்குவிக்கிறது.

நாம்  நற்பண்புடையவராகவும், பெரும்பாலான சமுதாயங்களிலும் மதங்களிலும் ஒரு முக்கியமாக மதிக்கப்படுவதால், மற்றவர்கள், மற்றும் உயிரினங்களுடன்  கருணையுடனும், உணர்ச்சியுடனும் இருப்பதே  இந்த நாளின் நோக்கமாகும்.

சாதி, மதம், இனம், மொழி, கலாச்சாரம், நாடு என எத்தனையோ வேறுபாடுகள் மக்கள் மத்தியில் அதிகரித்து வரும் காலம் இது. முன்னெப்போதும் இல்லாத வகையில் சக மனிதரிடத்தில் வேறுபாடுகளை தேடித்தேடி அடையாளம் கண்டு வருகிறார்கள். அறிவியலில், நாகரீகத்தில், வாழ்க்கை தரத்தில் முந்தைய தலைமுறையினரை விட பல மடங்கு மேம்பட்டிருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் உள்ளத்தில் ஈரமின்றி, சக உயிர்கள் மீது வலிய வெறுப்பை வளர்த்துக் கொண்டிருக்கிறோம்.

இந்தியா போன்ற பன்மைத்துவம் வாய்ந்த தேசங்களில், அன்பும், சகிப்புத்தன்மையும் மிகவும் அவசியம். பலவகையிலும் அடிப்படையில் வேறுபட்டிருக்கும் மக்கள் மத்தியில் மேலும் வெறுப்பை வளர்த்து ஆதாயம் அடைவது இங்கே அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மட்டுமன்றி, உலகம் முழுவதும் வெறுப்பு மண்டிக் கிடப்பதோடு, அன்பு, கருணை உள்ளிட்டவற்றை பூதக் கண்ணாடியில் தேட வேண்டியதாகி வருகிறது.

இந்த சூழலில் இன்று கொண்டாடப்படும் உலக கருணை தினம் முக்கியத்துவம் பெறுகிறது. அன்பும் பரிவும் கொண்ட உள்ளங்களில் கருணை அமுதமாய் சுரக்கும். அவதிப்படுவோரை எந்த எதிர்பார்ப்பும் இன்றி அரவணைத்து காக்க முயற்சிக்கும்.

அதன்படி 1998 முதல் வருடந்தோறும் நவ.13 அன்று உலக கருணை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 2008க்குள் பல நாடுகளில் கருணை தினம் அனுசரிக்கப்படுவ்து அதிகரித்தது. தற்போது கிட்டத்தட்ட உலகம் முழுவதிலும், இளம் பிராயத்தினர் மத்தியில், அவர்கள் அதிகம் அறிந்திராத கருணையின் மதிப்பை விளக்க இப்போதைய அவகாசம் அவசியமாகிறது.

ஆனால் அடுத்தவருக்கு கெடுதல் விளைவிக்காதும், துன்பம் தராதும், வயிறு எரியாதும், இன்னும் பல இம்சைகள் தராதும் கடந்துசெல்ல கற்றுக்கொள்ளலாம். இந்த உலகம் அழிவிலிருந்து தன்னைக் காத்துக் கொள்ளவும், நமது சந்ததியினருக்கு மீந்திருக்கவும் கருணை அவசியமாகிறது.

கருணை காட்டுவோம்.. நெஞ்சில் ஈரமின்றி போர்  என்ற பெயரிலே சிறார்களையும் விடாது கொள்ளும் நாடுகள் இன்று முதல் கருணையோடு நடக்க பாடுபடுவோம்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *