Bermuda Triangle: அமானுஷ்யம் நிறைந்த பகுதி!

Advertisements

அங்கே போனால் காணாமல் போவார்கள். வட அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் குறிப்பிட்ட இடத்தைக் கடக்கும் கப்பல்கள், விமானங்கள், படகுகள் மற்றும் மக்கள் அனைவரும் திடீரென்று காணாமல் போய் விடுவார்கள்…

என்ன காரணம்? அது தான் தெரியாது … இன்னும் புரியாத புதிராகவே உள்ளது. எப்போதிலிருந்து நடக்கிறது, இன்று நேற்று இல்லை பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து கொண்டே உள்ளது.

இந்த அமானுஷ்ய பகுதிக்கு `பெர்முடா டிரைஆங்கிள்’ எனப் பெயர். சில விவரிக்க முடியாத ஆச்சரியங்களாலும், இதுவரை அறியப்படாத. அசாதாரண நிகழ்வுகளாலும் மர்ம தேசமாக உள்ளது இக்குறிப்பிட்ட பகுதி. புளோரிடாவின் அட்லாண்டிக் கடற்கரையிலிருந்து பெர்முடா வரை கிரேட்டர் அண்டிலிஸ் தீவுகள் எனப்படும் பகுதிவரை முக்கோண வடிவில் உள்ள பரப்புவரை தான் இப்படியான நிகழ்வுகள் நடைபெறுகிறது.

வட அமெரிக்காவின் வட அட்லாண்டிக் பெருங்கடலின் ஒரு பகுதியில் இதுவரை 50-க்கும் மேற்பட்ட கப்பல்கள் மற்றும் 20-க்கும் மேற்பட்ட விமானங்கள், மர்மமான முறையில் காணாமல் போயின. இப்பகுதியில் பறந்த விமானங்கள் காணாமல் போனது. அவற்றைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட விமானங்களும் காணாமல் போனது.

அதாவது அறிவியலுக்கும் அறிவுக்கும் அப்பாற்பட்டதாக இந்த இடத்தைக் கடக்கும் எந்தப் பொருளாகட்டும், வாகனங்களாகட்டும், மனிதர்களாகட்டும் காணாமல் போவதே பெரும் சவாலாக இன்று வரை தொடர்கிறது.

அறிவியல் ரீதியாக ஆராய்ச்சி மேற்கொண்டதில், கடலின் ஈர்ப்பு விசை காரணமா ? அல்லது மீத்தேன் செறிவு காரணமாகவும் இருக்கலாம். புவி, இயற்பியல் சுற்றுச்சூழல் காரணிகள் இருக்கலாம். அகோனிக் கோடு – காந்த திசைக் காட்டி மாறுபாட்டை ஈடுசெய்ய வேண்டிய அவசியமில்லாத இடம்.

மேலும் பேரலைகள் 30.5 மீட்டர் உயரத்தை எட்டக்கூடிய பாரிய அலைகள், ஒரு கப்பல் அல்லது விமானத்தின் அனைத்து செயல்பாடுகளையும் நிறுத்தக் கூடியதாக இருக்கும் முக்கோணப் பகுதி ஆதலால், இங்குப் புயல்கள் ஒன்றிணைவதால் அவைகள் முரட்டு அலைகளாகவும் சீற்றம் மற்றும் பாதிப்பும் அதிகம் இருக்கக்கூடும். கடல் சீற்றத்தின் அதிர்வெண் கூடுவதும் ஒரு காரணம்.

ரேடார்களைக் கொண்டு ஆராய்ச்சி செய்ததில், தவறான கூற்றுகள் அறிவியல் ஆராய்ச்சி எனும் பெயரில் உலா வரத்தான் செய்கின்றன.
அமெரிக்காவின் தெற்கு கரோலின மாகாணத்தின் சார்லஸ்டன் துறைமுகதிலிருந்து நியூயார்க் துறைமுகம் நோக்கி 1812 -ஆம் ஆண்டு டிசம்பர் 30-ஆம் தேதி கிளம்பிய பேட்ரியாட் எனும் கப்பலின் நிலை இன்று வரை தெரியவில்லை.

அந்தக் கப்பலில் அமெரிக்காவின் மூன்றாவது துணை அதிபரின் மகள், இப்படியாக 1918-ல் பயணம் செய்த 300 -பேர். இது தொடர் கதையாகிப் போனது. அது சரி, ஆராய்ச்சியாளர்கள் என்ன கூறுகிறார்கள்? லாரன்ஸ் டேவிட் குஷே கூறுகையில் சூறாவளிக் காற்று அடிக்கடி உண்டாகும் கடல் பரப்பு ஆகும். ஆனால் ஒரு சில புரளிகளும் கட்டுக் கதைகளும் அவ்வப்போது அவிழ்த்து விடப்படுகிறது என்றார். பொதுவாக மர்மம் எதுவும் இல்லை என்று ஒரு சாரரும், திகிலூட்டும் புதிராக உள்ளது எனச் சாரரும் கூறுகின்றனர்.

அறிவியல் காரணமா? அறியாமை காரணமா?

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *