உத்தரகண்ட் மாநிலத்தில் சுரங்கப்பாதை சரிந்து விழுந்து விபத்து..!
உத்தரகண்ட் மாநிலத்தில் கட்டுமானத்தில் இருந்த கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் பல தொழிலாளர்கள் சுரங்கத்திற்குள் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. சுரங்கப்பாதையை திறந்து சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன.
உத்தரகண்ட் மாநிலம் உத்தரகாசியில் உள்ள தண்டல்கானுடன் சில்க்யாராவை இணைக்கும் வகையில் இந்த சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இது சார் தாம் சாலை திட்டத்தின் கீழ் கட்டப்படுகிறது, மேலும் உத்தர்காஷியில் இருந்து யமுனோத்ரி தாம் வரையிலான பயணத்தை 26 கிலோமீட்டர் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
அதிகாலை 4 மணியளவில் 150 மீட்டர் நீளமான இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். கட்டுமானப் பணியின் போது சுரங்கப்பாதை சரிந்து விழுந்ததில் 40 பேரை மீட்கும் பணி தீவிரம் உத்தரகண்ட் மாநிலத்தில் கட்டுமான பணியின் போது சுரங்கப்பாதை சரிந்து உள்ளே சிக்கித் தவித்து வரும் 40 பேரை மீட்கும் பணி 2 ஆவது நாளாக நடைபெற்று வருகிறது.
உத்தராகண்ட் மாநிலம் சில்க்யாரா பகுதியில் தேசிய நெடுஞ்சாலைக்கு கீழ் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று காலை 9 மணியளவில் சுரங்கத்தின் சுவர்கள் சரிந்து விழுந்தன. உள்ளே சுமார் 40 தொழிலாளர்கள் இருந்ததாக கருதப்படும் நிலையில் அவர்களை மீட்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
அதிநவீன துளையிடும் இயந்திரங்கள் உதவியுடன் இடிபாடுகளை அகற்றும் பணியில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். உள்ளே சிக்கியுள்ள தொழிலாளர்கள் சுவாசிக்க வசதியாக குழாய் மூலம் ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வருகிறது. மீட்பு பணிகளை உத்தராகண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி கண்காணித்து வருகிறார்.
தேசிய நெடுஞ்சாலையில் சுமார் நான்கு கிலோ மீட்டர் நீளத்திற்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வரும் நிலையில் அதில் 35 மீட்டர் நீளத்திற்கு சரிவு ஏற்பட்டுள்ளது. தொழிலாளர்கள் மீட்கப்பட்டால் அவர்களுக்கு முதலுதவி அளித்து மருத்துவமனை அழைத்துச் செல்ல மருத்துவர்கள் தயார் நிலையில் உள்ளனர். ஹெலிகாப்டர் மற்றும் ஆம்புலன்சும் தயார் நிலையில் உள்ளது.
இது குறித்து மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் கூறுகையில் அதிவிரைவு மீட்பு பணி நடைபெற்ரு வருவதாகவும் NDRF மற்றும் SDRF உள்ளிட்ட பேரிடர் குழுக்கள் மீட்பு பணியில் செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.