Today Rasi Palan: இன்றைய ராசிப்பலன் – 27.02.2024

மேஷம்

மேஷம் ராசிக்காரர்களுக்கு  சிறப்பான நாளாக இருக்கிறது. நீங்கள் உற்சாகமாக இருப்பீர்கள். பணியிடத்தில் உங்கள் கடின உழைப்பின் மூலம் வெற்றி பெறுவீர்கள். மேலும், வளர்ச்சி பெற்று முன்னேறுவீர்கள்.  பண வரவு அதிகமாகக் காணப்படும். கணவன் மனைவி இடையே நல்ல புரிந்துணர்வு காணப்படும். மேலும், ஆரோக்கியம் சிறப்பாகக் காணப்படும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு பொறுமையாக இருக்க வேண்டிய நாளாக இருக்கிறது.  முக்கியமான முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். பணியிடத்தில் உங்களுக்குச் சாதகமான சூழ்நிலை நிலவாது. மேலும்,  பணியில் தவறுகள் செய்ய வாய்ப்புள்ளது. துணையுடன் கருத்து வேறுபாடு காணப்படும்.  பொறுத்தவரை நிதிநிலைமை சிறப்பாக இருக்காது. ஆரோக்கியத்தில் பல் வலி ஏற்பட வாய்ப்புள்ளது.

 

மிதுனம்

மிதுனம் ராசிக்காரர்களுக்கு சிறப்பான நாளாக இருக்காது.  எதிலும் பொறுமை அவசியம். பணியிடத்தில் அதிகப்படியான பணிகள் காணப்படும். இதனால் குறித்த நேரத்தில் பணிகளை முடிக்க இயலாது.  துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். ஆரோக்கியத்தில் வயிற்று வலி ஏற்பட வாய்ப்புள்ளது.

 

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு  சாதகமான நாளாக இருக்கிறது. முக்கியமான முடிவுகளை எடுக்க   நீங்கள் பயன்படுத்தி கொள்ளலாம். பணியிடத்தில் உங்கள் திறமையை வெளிப்படுத்தி வெற்றி பெறுவீர்கள். துணையுடன் உணர்ச்சி வசப்பட்டுக் காணப்படுவீர்கள். பண வரவு சிறப்பாகக் காணப்படும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

 

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு  சாதகமான நாளாக இருக்காது.  எதிலும் கவனமாக இருப்பது அவசியம். பிறருடன் பேசும்போது யோசித்து கவனமாகப் பேச வேண்டும். பணியிடத்தில் உங்களுக்குச் சாதகமான சூழ்நிலை நிலவாது. துணையுடன் நட்பான அணுகுமுறை கொள்வீர்கள்.  பணப்புழக்கம் போதிய அளவு இருக்காது. ஆரோக்கியத்தில் கண் எரிச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது.

 

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு  பொறுமையாக இருக்க வேண்டிய நாளாக இருக்கிறது. உடன் பிறந்தவர்களால் வீட்டில் சில பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.  பணியிடச் சூழல் சாதகமாக இருக்காது. துணையுடன் பேசும்போது அமைதியான அணுகுமுறை அவசியம். பண வரவு குறைவாக இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

 

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு   சாதகமான நாளாக இருக்காது.  எதிர்மறை எண்ணங்களை நீங்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.  பணியிடத்தில் அதிக வேலை காரணமாகச் சோர்ந்து போவீர்கள். துணையுடன் உணர்ச்சி  வசப்பட்டுப் பேசுவீர்கள்.  பணப்புழக்கம் போதிய அளவில் இருக்காது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

விருச்சிகம்

விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு நன்மை தீமை இரண்டும் கலந்து காணப்படும் நாளாக இருக்கிறது. உங்கள் முயற்சிகளில் வெற்றி காண கடுமையாக உழைக்க வேண்டும். பணியிடத்தில் உங்கள் திறமையை வெளிபடுத்தி பாராட்டு பெறுவீர்கள். துணையுடன் மனம் திறந்து பேசி மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.பிராத்தனை செய்வது நல்லது. நிதிநிலமை சிறப்பாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு  சிறப்பான நாளாக இருக்கிறது. உங்கள் முயற்சியின் மூலம் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். பணியிடத்தில் சமூகமான நிலை காணப்படும். கடினமான பணிகளைக் கூட எளிதில் செய்து முடித்து வெற்றி பெருவீர்கள். கணவன் மனைவி இடையே நல்ல புரிந்துணர்வு ஏற்படும்.  பணவரவு சிறப்பாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மகரம்

 

 

மகரம் ராசிக்காரர்களுக்கு  உகந்த நாளாக இருக்காது.  உங்களுக்குச் சாதகமாக அமைய நிங்கள் பிராத்தனை மேற்கொள்ள வேண்டும். பணியிட சூழல் உங்களுக்குச் சாதகமான இருக்காது. பணியின் இறுக்கம் காரணமாக மேலதிகாரிகளால் சில பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடும். துணையுடன் புரிந்துணர்வு குறைந்து காணப்படும்.   பணபுழக்கம் குறைவாகக் காணப்படும். தாயின் உடல் நலத்தில் கவனம் செலுத்துவது அவசியம்.

 

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்குசாதகமான நாளாக இருக்காது.  நீங்கள் குழப்பத்துடன் நடந்து கொள்வீர்கள். பணியிடத்தில் அதிக பணிகள் காரணமாகப் பணிகளைக் குறித்த நேரத்தில் செய்து முடிக்க இயலாது. துணையுடன் வாக்குவாதத்தில் ஈடுபடு வாய்ப்புளள்து.  பணபுழக்கம் குறைந்து காணப்படும். ஆரோக்கியத்தில்  செரிமானம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்பட கூடும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு  உகந்த நாளாக இருக்கிறது.  நீங்கள் நன்மையான பலன்களைப் பெறுவீர்கள். பணியிடத்தில் உங்களுக்குச் சாதகமான சூழ்நிலை நிலவும். மேலும், வெற்றியும் பெறுவீர்கள். ணையுடன் நல்ல புரிந்துணர்வு உண்டாகும்.  நிதிநிலைமை சிறப்பாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *