P. B. Sreenivas: பிறந்ததினம் இன்று!

Advertisements

P. B. Sreenivas

தன்னுடைய இனிமையான குரலால், காலத்தால் அழியாத பாடல்களைப் பாடி, மக்களின் இதயங்களில் நீங்கா இடம் பிடித்த பழம்பெரும் திரைப்படப் பின்னணிப் பாடகர் திரு.பி.பி.ஸ்ரீநிவாஸ் அவர்கள் பிறந்ததினம்.

பழம்பெரும் பின்னணிப் பாடகர் பி.பி.ஸ்ரீநிவாஸ் அவர்கள் 12 மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியவர். பி.பி.ஸ்ரீநிவாஸ் அவர்கள் 1930ஆம் ஆண்டு செப்டம்பர் 22 ஆம் தேதி ஆந்திர மாநிலத்தின் காக்கிநாடாவில் பிறந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உட்பட 12 மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்கள் பாடியுள்ளார்.

இவர் கலைமாமணி, கன்னட ராஜ்யோத்சவா, டாக்டர் ராஜ்குமார் சவுஹர்தா உட்பட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார். தனது வசீகரக் குரலால் கோடிக்கணக்கான ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பெற்ற பி.பி.ஸ்ரீநிவாஸ்; 83-வது வயதில் 2013, ஏப்ரல் 14 ஆம் தேதி அன்று மறைந்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *