Seeman: “டேய்… செத்துருவ நீ”

Advertisements

வீரலட்சுமி கணவரும் சீமானும் மோதல்…!

நடிகை விஜயலட்சுமி, வீரலட்சுமி இருவரும் சேர்ந்து நாம் தமிழர் சீமானுடன் தொடர்ந்து சண்டையிட்ட நிலையில் தற்போது வீரலட்சுமி கணவருக்கும் சீமானுக்கும் இடையே புதிய மோதல் வெடித்துள்ளது. நடிகை விஜயலட்சுமி விவகாரத்தில் தமிழர் முன்னேற்றப் படை தலைவர் வீரலட்சுமியும் ஜோடி சேர்ந்து நாம் தமிழர் சீமான் மீது அதிரடி புகார்களைக் கூறி வந்தனர்.

இந்த நிலையில் வீரலட்சுமியின் கணவர் கணேசன் என்பவர் நாம் தமிழர் சீமானுடன் போனில் பேசியதாக ஒரு ஆடியோ வெளியானது. அந்த ஆடியோவில் வீரலட்சுமி கணவர் கணேசன் என்று சொல்லிக் கொள்பவர் அண்ணா சீமான் அண்ணா நல்லா இருக்கிறீர்களா என்று கேட்கிறார், பதிலுக்குச் சீமான்… தம்பி நீங்க யாரு சொல்லுங்க தம்பி என்கிறார்.

இதனை அடுத்து அவர் அண்ணன் நீங்களும் நானும் ரிங் ஏறிப் பாக்சிங் சண்டை போடலாமா என்று கேட்கிறார். இதனை அடுத்து சீமான் அந்தப் போனை கட் செய்து விடுகிறார்.

இந்த ஆடியோ குறித்து நாம் தமிழர் சீமானிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர் அப்போது என்னிடம் போனில் பேசியவர் பகலில் பேசி இருந்தால் உடனே சண்டை போடலாம் அவர் இரவு 7 மணிக்குப் பிறகு பேசுகிறார். என்னுடைய பேச்சை அவர் ரெக்கார்டு செய்வது எனக்குத் தெரிந்தது, அதனால் தான் போனை கட் செய்தேன். நான் ஏதாவது சொல்லி அது மீண்டும் சர்ச்சையாகி விடக் கூடாது என்பதால் தான் கட் செய்துவிட்டேன்.

அவருக்கு என் கையால் தான் சாவு என்றால் சண்டைக்கு வரச் சொல்லுங்கள். மகிழ்ச்சியாகக் கலந்து கொள்வேன். நேருக்கு நேர் மோத நான் தயாராக இருக்கிறேன். இதற்கான தேதி, நேரத்தை அவரிடம் கேட்டுச் சொல்லுங்கள் எப்போது வேண்டுமானாலும் வரட்டும். முதலில் என்னிடம் நேரில் வந்து நிற்கச் சொல்லுங்கள். இதை எல்லாம் பார்ப்பதற்கும் கேட்பதற்கும் சிரிப்பாக இருக்கிறது. இவற்றைக் கடந்து போக வேண்டும் என்று நினைக்கிறேன் இவ்வாறு சீமான் கூறினார்.

இதற்கிடையே பெங்களூருக்கு திரும்பிய நடிகை விஜயலட்சுமி சீமான் இன்னும் தொடர்ந்து நோய் கொண்டிருந்தால் அவர்மீது கர்நாடக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன் என்று அடுத்த கட்ட வீடியோவை வெளியிட்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *