நவம்பர்’14 குழந்தைகள் தினம்..!
நேரு மாமா என்று செல்லமாக குழந்தைகளால் அழைக்கப்படும் ஜவஹர்லால் நேருவின் பிறந்த தினம் இன்று.
குழந்தைகள் தின விழாவானது 1856 ஆம் ஆண்டு சூன்,ஞாயிறு (கிழமை) அன்று சார்லஸ் லியோனர்டு என்ற பாதிரியாரால் தொடங்கப்பட்டது ஆகும். அவர் குழந்தைகளுக்கு சிறப்பான சேவை செய்வதற்கான ஒரு நாளை ஏற்படுத்தினார். தொடக்கத்தில் அதற்கு பூக்கள் ஞாயிறு என பெயர் இருந்தது பின்னர் குழந்தைகள் தினம் என ஆனது.
இந்தியாவைப் பொறுத்தவரை குழந்தைகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 14-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பார்கள். குழந்தை மனம் கொண்ட நேருவின் பிறந்த நாளே குழந்தைகள் தினமாக அனைத்து பள்ளிகளில் சிறப்பாக நடத்தப்படுகிறது. இதற்காக பள்ளிகளில் பேச்சுப்போட்டி, பாட்டுப்போட்டி, நடனம் ஆகியவை நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது.
நம் நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு. இயற்கையிலேயே குழந்தைகள் மீது அதிக பிரியம் கொண்டவர் பண்டித ஜவகர்லால் நேரு. அதன் காரணமாக அவரை நேரு மாமா என்று அனைவரும் அன்போடு அழைத்தனர். குழந்தைகள் மீது கொண்ட அளவுகடந்த பாசம் காரணமாகவே தனது பிறந்தநாளை குழந்தைகள் தினமாக கொண்டாடுமாறு வலியுறுத்தினார் நேரு.
இந்த தினத்தில் குழந்தைகளுக்கான அடிப்படை உரிமைகள் மற்றும் அவர்களுக்கான கல்வி உறுதிநிலை குறித்து அரசு தரப்பில் அறிவுறுத்தப்படும். குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் ஆனால் குழந்தைகள் தினம் என்றால் என்பதையே அறியாமல் பல குழந்தைகள் உள்ளனர். குழந்தைகளுக்கு எதிரான கடத்தல், பாலியல் கொடுமை குற்றங்கள், தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கடந்தாண்டு மட்டும், இத்தகைய வழக்குகள், 810 பதிவாகியுள்ளன.
கடந்த மூன்றாண்டுகளில் குழந்தைகள் கற்பழிப்பு, பாலியல் கொடுமை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களின் விளைவு பற்றியும் பெற்றோர் புரியும்படி எடுத்துச் சொல்ல வேண்டும்.அவர்களுக்கு பாதுகாப்பான சூழலை நாம் உருவாக்கிக் கொடுக்க வேண்டும். அப்பொழுதான் உண்மையான குழந்தைகள் தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாட முடியும். அதிலும் பெண் குழந்தைகளை மிக கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டியது ஒவ்வொரு பெற்றோரின் கடமையாகும்.