All Saints’ Day: இன்று!

Advertisements

உலக புனிதர் தின விழா!

புனிதர் அனைவர் பெருவிழா என்பது கத்தோலிக்க திருச்சபை முதலிய பல மேற்கு கிறித்தவ திருச்சபைகளில் நவம்பர் 1 அன்றும் கிழக்கு திருச்சபைகளில் தூய ஆவி பெருவிழாவுக்கு அடுத்து வரும் ஞாயிறு அன்றும் கொண்டாடப்படும் ஒரு விழாவாகும். பல்வேறு நூற்றாண்டுகளில் பல்வேறு விதங்களில் கொண்டாடப்பட்டு வந்த இத்திருநாள் எட்டாம் நூற்றாண்டில் திருத்தந்தை மூன்றாம் கிரேகோரியின் காலத்தில் நவம்பர் முதல் தேதியன்று கொண்டாடப்பட்டது. திருச்சபையால் புனிதர் பட்டம் அளிக்கப்பட்ட புனிதர்கள் பலர் இருக்கும் போதிலும் இவ்வகை அங்கீகாரம் பெறாமல், ஆனால் புனித வாழ்வு வாழ்ந்த பலரை நினைவு கூறும் வண்ணம் இவ்விழா கொண்டாடப்படுகிறது.

கிறித்தவ கத்தோலிக்க சபையினர் இறந்தோரை நினைவுகூர்ந்து அவர்களுக்காக இறைவேண்டல் செய்கின்ற ஒரு சிறப்பு விழா. இதனைக் கல்லறைத் திருநாள் எனவும் புனித ஆத்துமாக்கள் தினம் எனும் அழைக்கின்றனர். கத்தோலிக்க திருச்சபையினர் நிகழ்வை வருடம் தோறும் நவம்பர் மாதம் 2ம் நாள் கொண்டாடுகின்றனர். இறந்தோரை நினைவுகூர்ந்து, அவர்கள் விண்ணகப் பேரின்பத்தை அடைவதற்காக அவர்களுக்காக இறைவேண்டல் செலுத்தும் வழக்கம் தூய்மை பெறும் நிலைபற்றிய நம்பிக்கையின் அடிப்படையில் எழுந்ததாகும்.

அதன்படி இன்று திருச்சி வேர் ஹவுஸ் கல்லறையில் மரித்த முன்னோர்கள் விண்ணகப் பேரின்பத்தை அடைவதற்கு முன் தங்கள் பாவங்களுக்காகப் பரிகாரம் செய்யும் “உத்தரிக்கிற ஸ்தலம்” அல்லது “உத்தரிப்பு ஸ்தலம்” என்று அழைப்பது வழக்கம் இறந்து உத்தரிப்பு நிலையில் வேதனைப்படும் உற்றார், உறவினர், நண்பர்களின் மற்றும் யாரும் நினையா ஆன்மாக்களை நினைவு கூர்ந்து அவர்களுக்காக இந்நாளில் கிறித்தவர் வேண்டுதல் செலுத்துகின்றனர்.

இந்நிகழ்வில் கல்லறைகள் மலர்களாலும் மெழுகுதிரிகளாலும் அலங்கரிக்கப்படுகின்றன. கல்லறைத் தோட்டங்களில் திருப்பலி நிறைவேற்றப்பட்டு பின்னர் கல்லறைகள் மந்திரிக்கப்படுகின்றன. இன்று காலை முதலே பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அண்டை மாநில இருந்தும் தங்கள் முன்னோர்கள், உறவினர்கள் கல்லறைக்கு வழிபாடு செய்ய வருகை தந்து தங்களது முன்னோரின் கல்லறையை அலங்கரித்து ரோஜா மற்றும் பூக்கள் தூவி மெழுகுவர்த்தி ஏற்றி ஊதுபத்தி ஏற்றி வழிபாட்டில் ஈடுபட்டனர்.2

புனிதர்கள்  அன்றாடம் தங்களின் உன்னத் வாழ்வால் இந்த மேன்மையை அடைந்துள்ளனர். திருத்தூதர்கள், மறைசாட்சிகள், மறைப்பணியாளர்கள், துறவற்த்தார்கள் மட்டுமல்லாது பல இல்லறத்தார்களும் புனிதர்களாகியுள்ளனர். இவர்கள் திருமுழுக்கு பெற்றவர்கள் புனித வாழ்வு வாழ்வதும், மாறுவதும் சாத்தியமில்லை தான். அன்பான உள்ளம், கடவுள் நம்பிக்கை,கனிவு, பக்தி,மற்ற எல்லா நிலைகளிலும் புனிதத்தையே கடைபிடிக்க வேண்டும்.

தூயவர்களை நினைவு கூரவும், புகழவும்,அவர்களின் கொள்கைகளை பின்பற்றுவதும் திருவிவிலியம் போதிக்கின்றது. கடவுளின் வார்த்தைகளை எடுத்துச் சொன்ன தலைவர்களை  போற்ற வேண்டும். கி.பி 155-156 ஆண்டிலிருந்தே புனிதர்களுக்கு வணக்கம் செலுத்துவது பிரதானமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்துள்ளது. புனித சிப்பிரியன் குருக்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் அவர்களின் கல்லறைகளில் ஒன்று கூடிச் செபிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளதையும் காணலாம். கி.பி. எட்டாம் நூற்றாண்டில் புனிதர் உருவங்கள், சுரூபங்கள் போன்றவை நிறுவப்பட்டு மக்கள் பார்க்கும் போது அவர்களை நினைத்து மனதளவில் மரியாதை செலுத்துவர்.

தூய வெள்ளை நிற உடையில் கடவுளின் முத்திரையோடு வசனங்களை ஓதுபவர் எவரோ, அவரே புனிதர். கடவுளை நம் கண் முன்னே நிறுத்துபவர், திருப்பாடல்கள் பாடி நீதி போதனைகள் கூறி நோயுற்றோருக்காக ஜெபம் செய்து ஒழுக்கத்தைக் கற்பித்து, உயிர்களிடத்தில் அன்பு செலுத்தி தன்னலம் கருதாமல் பிறர்க்கென அல்லும் பகலும் ஆண்டவரை தொழுது பாவ மன்னிப்பு அருளும் அருளார்கள் தான் புனிதர்கள் என்று அழைக்கப்படும் துறவிகள்.

மே 13, கிபி 609 போனிபேஸ் 4 இந்த புனிதர்கள் தினத்தை அறிவித்தார். ரோம் நகரத்திலுள்ள பாந்தியன் மற்றும் விர்ஜின் மேரி ஆகியோருக்காகவும், போப்  மூன்றாம் கிரேகோரிக்கும் நவம்பர் 1-ஆம் தேதி அர்ப்பணிக்கப்பட்டது. அனைத்து உலக புனிதர்களுக்கும் அர்ப்பணித்து செயிண்ட் பீட்டர்ஸ் பேசிலிகா கல்லறையில் அனுசரிக்கப்பட்டது. அயர்லாந்தில் 9-ஆவது நூற்றாண்டில் ஆரம்பிக்கப்பட்டு அனைத்து புனிதர்களுக்கு  கிபி 270 -ல் கொண்டாடப்பட்டது.

இந்தப் புனித நாளானது கடவுள் நம்பிக்கையோடும் இயேசு கிறிஸ்து உறையும் சர்ச்களிலும் புனிதர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தப்பட்டு கத்தோலிக்  சர்ச்களில் புனித நாளாக கொண்டாடுவது அவர்களை கவுரவப்படுத்தும் நல்ல நாளாகும்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *