TNPSC:பெரும்பாலான தேர்வுகளுக்கு விடைக்குறிப்பு வெளியிடப்படுவதில்லை: உயர்நீதிமன்றம் அதிருப்தி!

மதுரை: ‘டிஎன்பிஎஸ்சி நடத்தும் பெரும்பாலான தேர்வுகளுக்கு இறுதி விடைக்குறிப்பு வெளியிடுவதில்லை’ என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் குரூப்-1 முதல்நிலை தேர்வு தமிழகம் முழுவதும் ஜூலை 13ம் தேதி நடைபெற்றது. மொத்தம் 90 காலியிடங்களுக்கான இந்த தேர்வை 2.38 லட்சம் பேர் எழுதினர். இதன் முடிவுகள் இன்னும் வெளியிடவில்லை. இந்த நிலையில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில், குரூப்-1 தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதிக்குமாறு வழக்கு தொடரப்பட்டது.

புலியின் பெயரில் வாரி சுருட்டிய வன அதிகாரிகள்!
அந்த வழக்கில், ‘டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 தேர்வுக்கான இறுதி விடைக்குறிப்பு இதுவரை வெளியிடப்படவில்லை. விடைக்குறிப்பு வெளியிடவும், மொழிபெயர்ப்பு தவறான 6 வினாக்களுக்கு சலுகை மதிப்பெண் வழங்க கோரியும், அதுவரை தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதிக்குமாறும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ”டிஎன்பிஎஸ்சி நடத்தும் பெரும்பாலான தேர்வுகளுக்கு இறுதி விடைக்குறிப்பு வெளியிடுவதில்லை. அதேபோல், நீதித்துறை தேர்வுகளுக்கு வெளியிடுவதில்லை. வழக்கு தொடர்பாக டிஎன்பிஎஸ்சி தலைவரிடம் விளக்கம் பெற்று தமிழக அரசு தெரிவிக்க வேண்டும்,” என உத்தரவிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *