Today Gold Rate In Chennai: நகைப்பிரியர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்! மீண்டும் தங்கம் விலை கிடுகிடுவென உயர்வு!

தங்கம் விலை கடந்த இரண்டு நாட்களாகச் சரசரவெனக் குறைய தொடங்கிய நிலையில் இன்று விலை உயர்ந்துள்ளது நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

மத்திய பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளிக் கட்டிகள்மீதான சுங்க வரி 15 சதவிகிதத்திலிருந்து 6 சதவிகிதமாகவும் குறைக்கப்பட்டதை தொடர்ந்து தங்கம் விலை சரிந்து வந்தது. கடந்த சில நாட்களில் மட்டும் 3500க்கும் மேல் தங்கம் விலை குறைந்து வந்தது. இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாகத் தங்கம் விலை சரசரவெனக் குறைந்து வந்த நிலையில் இன்று மீண்டும் உயரத்தொடங்கியுள்ளது.

நேற்றைய நிலவரப்படி சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.50,640-க்கு விற்பனையானது. அதேபோல், தங்கம் கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.6,330-க்கு விற்பனையானது.

இன்றைய (ஆகஸ்ட் 08) நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.50,800-ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.6,350-ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 6,805-ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ.54,440-ஆக விற்பனையாகிறது.

வெள்ளி விலை 50 காசுகள் உயர்ந்து கிராம் வெள்ளி ரூ.87.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.87,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *