padmapriya:மலையாள நடிகர் சங்கத்துக்கு முதுகெலும்பே கிடையாது!

Advertisements

திருவனந்தபுரம்: ‘மலையாள நடிகர் சங்கத்துக்கு முதுகெலும்பே கிடையாது’ என்று பிரபல நடிகை பத்மபிரியா விமர்சித்துள்ளார்.

Advertisements

தினம் ஒரு புகார்

மரங்கள் ஓய்ந்தாலும் காற்று விடுவதில்லை போலும். அப்படித்தான் கேரள சினிமாவில் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. நித்தம், நித்தம் ஒரு புகார், வழக்குப்பதிவு என மல்லுவுட் உலகம் பரபரப்பாக சென்று கொண்டு இருக்கிறது.

குபீர் குற்றச்சாட்டு

பிரபல நடிகர்கள் பலரும் பாலியல் குற்றச்சாட்டில் சிக்கி பெரும் சர்ச்சைக்கு ஆளாகி இருக்கும் நிலையில் முன்னணி நடிகை பத்மபிரியா ஒரு குபீர் குற்றச்சாட்டை எழுப்பி திரையுலகை மீண்டும் திரும்பி பார்க்க வைத்துள்ளார். மலையாள நடிகர் சங்கத்துக்கு முதுகெலும்பே இல்லை என்று போட்டு தாக்கி உள்ளார்.

முதுகெலும்பு

இது குறித்து அவர் கூறி உள்ளதாவது; ஹேமா கமிட்டி அறிக்கை ஏன் 4 ஆண்டுகள் தாமதமாக வெளியிடப்பட்டது என அரசு விளக்கம் அளிக்க வேண்டும். நடிகர்கள் சங்கத்துக்கு சங்கத்துக்கு முதுகெலும்பே கிடையாது. ராஜினாமா என்பதே பொறுப்பற்ற நடவடிக்கை. எல்லாரும் மொத்தமாக ராஜினாமா என்றால், யாரிடம் அதை ஒப்படைக்கப் போகிறார்கள்? எதுவுமே தெரியாதது போல் பேசும் மோகன்லால், மம்முட்டி ஆகிய இருவரின் கருத்துகள் எனக்கு ஏமாற்றத்தையே தருகின்றன.

போதை

மலையாள திரையுலகில் அதிகார மையம் என்று ஒன்று இருக்கிறது. அதிகாரம் இருப்பதால் தான் அவர்கள் நடவடிக்கைகள் இவ்வாறு உள்ளது. நடிகைகளை அவர்கள் ஒரு போதையாகவே பார்க்கின்றனர். எனக்கு இப்போது அதிக படங்கள் கையில் இல்லை, வாய்ப்புகள் குறைந்துவிட்டன. அதற்கு என்ன காரணம் என்று எனக்கு நன்றாக தெரியும்.

பேச்சு

26 வயதில் நான் இருக்கும்போது, ‘உங்களுக்கு வயதாகிவிட்டது, நடிப்பதை நிறுத்துங்கள்’ என்று தயாரிப்பு நிர்வாகி ஒருவர் கூறினார். அவரின் இந்த பேச்சு பெரும் அதிர்ச்சியாக எனக்கு இருந்தது.

இவ்வாறு பத்மபிரியா கூறினார்.பத்மப்பிரியா தமிழில், சேரன் இயக்கிய தவமாய் தவமிருந்து, பொக்கிஷம் படங்களிலும், ‘சத்தம் போடாதே’ படத்திலும் நாயகியாக நடித்திருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *