Today’s Weather : தமிழகத்தில், இன்றும், நாளையும், அதிகபட்ச வெப்பநிலை!

Advertisements
தமிழகத்தில், இன்றும், நாளையும், அதிகபட்ச வெப்பநிலை, 4 டிகிரி செல்ஷியஸ் கூடுதலாக பதிவாக வாய்ப்புள்ளது என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டல கீழடுக்கு பகுதியில் கிழக்கு, மேற்கு திசை காற்று சந்திப்பு நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஒருசில இடங்களில் இன்றும், நாளையும் அதிகபட்ச வெப்பநிலை, 4 டிகிரி செல்ஷியஸ் கூடுதலாக பதிவாகக் கூடும் என்றும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்ஷியசாக பதிவாகலாம் என்று கூறப்பட்டுள்ளது.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *