
டிஎன்பிஎஸ்சி 2024ம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வு அட்டவணையை அரசு இன்று வெளியிட்டுள்ளது. இதில் குரூப் 1-65 பணியிடங்கள், குரூப்2/2A-1294 பணியிடங்கள், வனத்துறை(Forest Guard&Forest Watcher)-1264 பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
குருப் 4 தேர்வு உள்ளிட்ட பல்வேறு தேர்வுகள் குறித்தும் முக்கிய தகவல்கள் அட்டவணையில் உள்ளது. தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவைப்படும் ஊழியர்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலமாக தேர்வு செய்யப்படுகிறார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் எந்தெந்த பணிகளுக்கு என்னென்ன போட்டித்தேர்வுகள் நடத்தப்படும்? காலியிடங்கள் எவ்வளவு, தேர்வுக்கான அறிவிப்பு எப்போது வெளியாகும்? எழுத்துத் தேர்வு எப்போது நடத்தப்படும்? தேர்வு முடிவுகள் வெளியாகும் நாள் ஆகிய விவரங்களை உள்ளடக்கிய வருடாந்திர தேர்வு கால அட்டவணையை டிஎன்பிஎஸ்சி ஆண்டும்தோறும் வெளியிடும்.
இந்நிலையில், 2024-ம் ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணை டிச.15-ல் வெளியாகும் என தகவல் வெளியானது.

வனத்துறை(Forest Guard&Forest Watcher)-1264 பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும்,
இதற்கான தேர்வு ஜூன் மாதம் நடத்தப்படும் என்றும், குரூப் 1-65 பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும், இதற்கான அறிவிப்பு மார்ச் மாதம் வெளியிடப்பட்டு, ஜூலை மாதம் தேர்வு நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் குரூப்2/2A-1294 பணியிடங்கள், நிரப்பப்படும் என்றும், இதற்கான அறிவிப்பு மே மாதம் வெளியிடப்பட்டு, ஆகஸ்ட் மாதம் தேர்வு நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
118 வனத்துறை அதிகாரி பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும், இதற்கான அறிவிப்பு மே மாதம் வெளியிடப்பட்டு, ஆகஸ்ட் மாதம் தேர்வு நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்ஜினியர், அறிவியல், நீதித்துறை, நிதித்துறை, என பல்வேறு துறைகளில் காலி பணியிடங்கள் மே மாதம் முதல் செப்டம்பர் வரை அறிவிக்கப்பட்டு தேர்வுகள் நடத்தப்பட உள்ளது.

