“ஹார்முஸ் எங்கள் கட்டுப்பாட்டில்!” – ஈரான் அதிரடி அறிவிப்பு!

அமெரிக்கா- இஸ்ரேல் படைகளிடம் இருந்து, ஹார்முஸ் நீரிணையை வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் உச்சத் தலைவர் அயதுல்லா மொஜ்தாபா காமேனி தெரிவித்துள்ளார்.
ஈரான் நாட்டின் உச்சத் தலைவர் அயதுல்லா மொஜ்தாபா காமேனி சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், நமது வீரர்களின் பலத்த அடியைத் தாங்க முடியாமல் எதிரிப்படைகள் ஹார்முஸ் பகுதியை விட்டு விரட்டியடிக்கப்பட்டு, அப்பகுதி வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
போரை முடிவுக்குக் கொண்டுவர கத்தார் உள்ளிட்ட சர்வதேச மத்தியஸ்தர்கள் மீண்டும் பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளதாகக் கூறியுள்ளார். அதில் பொருளாதாரப் பாதிப்பு மற்றும் சர்வதேச எரிபொருள் விலை உயர்வைக் குறைக்க இரு நாடுகளையும் வளைக்க மத்தியஸ்தர்கள் புதிய வரைவுத் திட்டங்களை நகர்த்தி வருவதாகத் தெரிவத்துள்ளார். இதனால் விரைவில் சுமுக ஒப்பந்தம் எட்டப்படலாம் என அந்த நாடுகளின் வெளியறவுத்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளதாகக் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *