
காசாவில் 15 மாதங்களுக்கு மேலாக நடந்து வந்த போரை முடிவுக்கு கொண்டு வர இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பு இடையே ஒப்பந்தம் ஏற்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் 19ஆம் தேதி முதல் போர்நிறுத்தம் அமலுக்கு வருமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பினர் இடையேயான மோதல் 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கியது. இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய ஹமாஸ் அமைப்பினர், பலரை பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்றனர்.இஸ்ரேலிடம் இருக்கும் பாலஸ்தீனிய கைதிகள் மற்றும் இஸ்ரேலிய பிணைக் கைதிகளை பரிமாற்றம் செய்ய இருதரப்பும் சம்மதம் தெரிவிக்கப்பட்டதால், 15 மாதங்களுக்கு மேலாக நீடித்து வந்த போர் முடிவுக்கு வருகிறது.
19ஆம் தேதி முதல் காசாவில் போர்நிறுத்தம் அமலுக்கு வருமென அறிவிக்கப்பட்டுள்ளதால், காசாவில் உள்ள பாலஸ்தீனியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பொதுவெளியில் கூடியவர்கள் இதனை வரவேற்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் , அனைத்து பிணைக்கைதிகளையும் மீட்கும் வரை போராடுவோம் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போர் 2023ம் ஆண்டு அக்டோபரில் இருந்து தற்போது வரை நடைபெற்று வருகிறது. காசா முனைக்கு ஹமாஸ் அமைப்பினர் கடத்தி சென்ற பிணைக்கைதிகளை மீட்க இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. அவர்களை ஒப்பந்த அடிப்படையிலும், ராணுவ நடவடிக்கை மூலமும் இஸ்ரேல் மீட்டுள்ளது.
இந்நிலையில், ஹமாஸ் அமைப்பினரால் கடத்திச் செல்லப்பட்ட பிணைக்கைதிகளில் ஜூடி வெயின்ஸ்டெயின் , மற்றும் கட் ஹக்காய் ஆகிய இரண்டு பேரின் உடல்களை இஸ்ரேல் மீட்டதாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். மேலும், அனைத்து பிணைக்கைதிகளையும் மீட்கும் வரை போராடுவோம் என்று பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.




