
டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் தொடரில், இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடைபெற உள்ளன.
8 அணிகள் இடையிலான 9-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் கோவையில் கடந்த 5-ந் தேதி தொடங்கியது. இந்த தொடரின் முதற்கட்ட லீக் ஆட்டங்கள் கோவையில் நடந்து முடிந்தன. இந்நிலையில், தொடரின் 2வது கட்ட லீக் ஆட்டங்கள் சேலத்தில் நடந்து வருகிறது.
இதில் இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. அதன்படி மாலை 3.15 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில், திருச்சி கிராண்ட் சோழாஸ் – ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோத உள்ளன.
தொடர்ந்து இரவு 7.15 மணிக்கு தொடங்கும் மற்றொரு ஆட்டத்தில், நெல்லை ராயல் கிங்ஸ் – சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.



