
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் நடைபெற்ற டிக்கெட் டூப்பினாலே டாஸ்க்கில் முதல் சுற்றிலேயே மூன்று பேர் எலிமினேட் ஆகி உள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் தற்போது பைனலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. 85 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சியில் கடந்த வாரம் சரவண விக்ரம் எலிமினேட் ஆனதால், 10 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சி உள்ளனர்.
ரவீனா, மணி, பூர்ணிமா, நிக்சன், மாயா, விஜய் வர்மா, விசித்ரா, தினேஷ், விஷ்ணு, அர்ச்சனா ஆகிய 10 பேருக்கு இடையே இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதற்காகக் கடும் போட்டி நிலவி வருகிறது.
பிக்பாஸ் 7-வது சீசனில் டிக்கெட் டூப்பினாலே டாஸ்க் இந்த வாரம் நடத்தப்படுகிறது. இந்த டாஸ்க்குகளில் வெற்றிபெற்று முதலிடம் பிடிக்கும் போட்டியாளர் நேரடியாக இறுதிப்போட்டிக்குள் நுழையும் வாய்ப்பைப் பெறுவார். இந்தப் போட்டியில் அர்ச்சனா மற்றும் விஜய் வர்மா ஆகியோர் கலந்துகொள்ளக் கூடாது என ஹவுஸ்மேட்ஸ் தேர்வு செய்ததால் அவர்கள் இருவரும் இந்த டாஸ்க்குகளில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்துள்ளனர்.
எஞ்சியுள்ள மணி, ரவீனா, விசித்ரா, மாயா, பூர்ணிமா, தினேஷ், நிக்சன், விஷ்ணு ஆகிய 8 போட்டியாளர்களுக்கு இடையே தான் இந்த டிக்கெட் டூப்பினாலே டாஸ்க்கிற்கான போட்டி நடைபெற்று வருகிறது. இதில் முதல் ஆளாக ரவீனா எலிமினேட் ஆகி இருப்பது தற்போது வெளியாகி இருக்கும் புரோமோவின் மூலம் தெரியவந்துள்ளது. இதையடுத்து தினேஷ் மற்றும் விசித்ரா ஆகியோரும் இந்த டாஸ்க்கிலிருந்து எலிமினேட் ஆகி இருக்கின்றனர்.
இப்படி முதல் ரவுண்டிலேயே மூன்று பேர் எலிமினேட் ஆகிவிட்டதால் எஞ்சியுள்ள மாயா, பூர்ணிமா, மணி, நிக்சன், விஷ்ணு ஆகிய 5 பேருக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இவர்கள் ஐந்து பேரிலிருந்து ஒருவர் தான் இந்த டிக்கெட் டூப்பினாலே டாஸ்க்கில் வெற்றிபெற உள்ளார்கள் என்பது உறுதியாகத் தெரிகிறது. அவர்கள் யார் என்பது இந்த வார இறுதியில் தெரிந்துவிடும்.


