தேவாலயங்களை இடிக்கும் பாஜக..! துணைபோகும் விஜய்..! திருமா அட்டாக்..

Advertisements

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் நிலையில், நேற்றைய தினம் திருச்சியில் பரப்புரை செய்தார் விஜய். இந்நிலையில் திமுக வேட்பாளரை ஆதரித்து திருச்சியில் பிரச்சாரம் செய்த விசிக தலைவர் திருமாவளவன்,  கிறிஸ்தவர்களுக்கு எதிரான, தேவாலயங்களை இடிக்கிற கட்சியாக பாஜக இருக்கிறது. வெறுப்பை பரப்பி, மதவெறி அரசியல் செய்யும் கட்சியாக பாஜக இருக்கிறது.

இப்பேற்பட்ட கட்சியை தோளில் தூக்கி வளர்க்கும் கட்சியாக அதிமுக இருக்கிறது. அந்த கட்சிக்கு மறைமுகமாக துணைபோகிறவர்தான் விஜய்” என்று கடுமையாக தாக்கி பேசியுள்ளார்..தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான பரப்புரை நாளையுடன் நிறைவு பெறவுள்ளது. வரும் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தங்களின் பிரச்சாரங்களை தீவிரப்படுத்தியுள்ளன.

இதனிடையில் நாளையுடன் பரப்புரை நிறைவு பெற இருப்பதால், தேசிய கட்சியை சார்ந்த தலைவர்கள் தமிழகத்துக்கு வருகை தந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் விசிக தலைவர் திருமாவளவன், விஜய்யின் கட்சி 233 தொகுதிகளில் போட்டியிடவுள்ள நிலையில், அவர்மீது திருமாவளவன் தொடர்ச்சியாக பல விமர்சனங்களை முன்வைத்து கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் திருச்சி கிழக்கில் திமுக சார்பாக போட்டியிடும் இனிகோ இருதயராஜ் வேட்பாளரை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட்டார் திருமாவளவன். அப்போது அதே தொகுதியில் போட்டியிடும் தவெக தலைவர் விஜய்யை கடுமையாக விமர்சனம் செய்தார்..

அவர் பேசுகையில், கிறிஸ்தவர்களை ஒடுக்கிற கட்சி. பைபிளை கொழுத்துகிற கட்சி. தேவாலயங்களை இடிக்கிற கட்சி. மதவெறி, வெறுப்பு அரசியலை பரப்புகிற கட்சி பாஜக. அந்த கட்சியை தோளிலே தூக்கி வரக்கூடிய கட்சி தான் அதிமுக. அந்த கட்சிக்கு மறைமுகமாக துணை போகிறவர் தான் விஜய் என காட்டமாக விமர்சித்துள்ளார்..

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *