TN Fishermen: துபாயில் தவித்த 2 மீனவர்கள் சொந்த ஊருக்குத் திரும்பினர்!

தமிழகத்திலிருந்து துபாய்க்கு மீன்பிடிக்க சென்று சொந்த ஊருக்குத் திரும்ப முடியாமல் தவித்த 2மீனவர்காளை தூதரகம் வாயிலாக  மீட்டு தமிழக அதிகாரிகள் உதவியுடன் தமிழகம் திரும்பினார்.இவர்களை அமைச்சர் செஞ்சி  மஸ்தான் மற்றும் மனோ தங்கராஜ் ஆகியோர் விமான நிலையத்தில் வரவேற்று அவர்களின் செந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.

குமரி மாவட்டத்தைச் சார்ந்த ஒன்பது மீனவர்கள் மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சார்ந்த இரண்டு மீனவர்கள் துபாய்க்கு சென்று அங்கு ஒப்பந்த அடிப்படையில் மீன் பிடிக்கும் பணி மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் கடந்த நான்கு மாதத்திற்கு முன்பு கன்னியாகுமரி மாவட்டத்தைச் சார்ந்த மீனவர் ஒருவரின் தந்தை இறந்து விடவே அதற்கு ஊருக்குச் செல்ல வேண்டும் என விடுப்பு கேட்டுள்ளார். இதனால் ஒப்பந்ததாரருக்கும் மீனவர்களுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது.

இதன் காரணமாக முறையான சம்பளம் மற்றும் உணவு வழங்கப்படாமல் இருந்ததால் சொந்த ஊருக்கு வரும் முயற்சியில் அனைத்து மீனவர்களும் ஈடுபட்டனர். ஏற்கனவே ஏற்பட்ட வாக்குவாதம்குறித்து துபாயில் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில் சொந்த ஊருக்குச் செல்ல வேண்டும் என்றால்  பணத்தை செலுத்தினால் தான் சொந்த ஊருக்கு அனுப்ப முடியும் என ஒப்பந்ததாரர்  தெரிவித்த நிலையில் நீதிமன்றம் மற்றும் இந்திய தூதரகம் தொடர்பு கொண்டு தமிழக அதிகாரிகள் உதவியுடன் தமிழகம் திரும்பினார்.

இவர்களை அமைச்சர் செஞ்சி  மஸ்தான் மற்றும் மனோ தங்கராஜ் ஆகியோர் விமான நிலையத்தில் வரவேற்று அவர்களின் செந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *