
கன்னியாகுமரி மாவட்டம் பளுகல் ஊராட்சியில் புதிதாகத் துவங்க உள்ள டாஸ்மாக் கடை அனுமதியை ரத்து செய்யக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் ஊர் பொதுமக்கள் மனு அளித்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் தமிழக கேரள எல்கைக்கு உட்ப்பட்ட கிராமமான பழுகல் ஊராட்சியில் 2-வது, மற்றும் 3-வது, க்கு உட்ப்பட்ட பகுதியில் டாஸ்மாக் கடை துவங்கும் திட்டத்திற்க்கான அனுமதியை ரத்து செய்யக் கோரி பளுகல் திமுக பேரூர் செயலார் அருள் ஜார்ஜ் தலைமையில் அப்பகுதி பொதுமக்கள் நேற்று கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
பளூகல் ஊராட்சி அதிகமான மக்கள் தொகை இல்லாத ஒரு சிறிய ஊராட்சி ஆகும். இங்கு ஏற்கனவே ஒரு தனியார் மது பானக்கூடம், இரண்டு அரசு மதுபான கடைகள் செயல்பட்டு வருகின்றன மொத்தம் மூன்று மதுபான கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் சில விஷமிகள் லாப நோக்கில் மீண்டும் ஒரு டாஸ்மாக் மதுபான கடை இந்த 2-வது மற்றும் 3-வது வார்டு பகுதியில் கொண்டு வருவதற்கான பணிகள் நடந்து வருகிறது. அதற்கான இடத்தையும் தேர்வு செய்து பணிகளும் நடைபெற்று வருகின்றன இந்தச் சம்பவம் அப்பகுதியில் உள்ள மக்களுக்குக் காட்டுத் போல் பரவியதால் மக்கள் மிக அச்சத்தில் உள்ளனர். இந்த டாஸ்மாக் கடை அமையவிருக்கும் 60 மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள குருசடியில் 24 மணி நேரமும் பொதுமக்கள் வழிபடுவதற்காக வந்து செல்கின்றனர்.
தனியார் பள்ளிக்கூடம் மற்றும் கிறிஸ்தவ தேவாலயம் அமைந்துள்ள பகுதியாகும். அதுபோல் இங்குச் செயல்படும் பள்ளியில் சுமார் 225 குழந்தைகள் தினமும் படிக்க வருகின்றனர் வளர்ந்து வரும் குழந்தைகளின் மனதில் எதிர்மறையான தாக்கத்தையும், தொல்லையையும் அழிக்கும், குழந்தைகளை வெகுவாகப் பாதிக்கும் என்றும் இந்தக் கடை பொது பேருந்து நிறுத்ததிற்க்கு எதிரே அமைந்துள்ளதால் இங்கு ஏராளமான குழந்தைகள், பெண்கள், முதியவர்கள், போக்குவரத்திற்க்காகக் காத்திருகின்ற பகுதியாகும் மதுபானக்கூடம் இந்தப் பகுதியில் அமைந்தால் போக்குவரத்து இடையூறு மற்றும் சட்ட ஒழுங்குப் பிரச்சனைகள் எழும் அது போன்று இதே பகுதியில் இரண்டு மூன்று முந்திரி ஆலைகள் செயல்பட்டு வருகின்றன தினமும் நூற்றுக்கணக்கான பெண்கள் அந்தப் பகுதியில் வேலைக்கு நடந்து சென்று வருகின்றனர்.
ஆகையால் இந்த மதுபானக்கூடம் அந்தப் பகுதியில் அமையக் கூடாது எனப் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர் இது சம்பந்தமாகமாவட்டஆட்சித்தலைவரையும்மாவட்டகாவல்கண்காணிப்பாளரையும், குமரி மாவட்ட அமைச்சர் மனோ தங்கராஜ், மற்றும் டாஸ்மார்க் மேலாளர் (செண்பகராமன் புதூர்) ஆகியோரை நேரில் சந்தித்து புகார் மனுக்கள் அளித்துள்ளோம். அரசு பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இந்த மதுபான கூடத்தை இந்த இடத்தில் மீண்டும் அமைத்தால் ஊர் பொதுமக்கள் ஒன்று கூடி கட்சி பாகுபாடின்றி மாபெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனப் பளுகல் திமுக பேரூர் செயலாளர் அருள் ஜார்ஜ் கூறினார். உடன் மணி விலா ஆர்.சி சர்ச் பங்கு தந்தை ராபின் சி பீட்டர், அருட்சகோதரி சைலாமா பள்ளி தலைமை ஆசிரியை, மற்றும் வார்டு கிளை செயலாளர் அனிஷ், மணிகண்டன் மற்றும் ஊர் பொதுமக்கள் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

