
மத்திய அரசை வலியுறுத்தித் தனி தீர்மானம்.
தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்கக் கர்நாடகா அரசுக்கு உத்தரவிட மத்திய அரசை வலியுறுத்தி முதலமைச்சர் ஸ்டாலின் தனி தீர்மானம் கொண்டுவந்தார்.
தமிழ்நாடு குளிர்க்கால சட்டப்பேரவை இன்று காலை 10 மணிக்குத் தொடங்கியது. முதலாவதாக மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து உறுப்பினர்களின் கேள்விக்குப் அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர்.இந்த நிலையில் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்கக் கர்நாடகா அரசுக்கு உத்தரவிட மத்திய அரசை வலியுறுத்தி முதலமைச்சர் ஸ்டாலின் தனி தீர்மானம்கொண்டுவந்தார்.
அப்போ
மத்திய அமைச்சரைச் சந்தித்து நீர்வளத்துறை அமைச்சர் தொடர்ந்து இதுகுறித்து வலியுறுத்தியுள்ளார். நீதிமன்ற உத்தரவையும் கர்நாடக அரசு பின்பற்றவில்லை. கர்நாடகாவில் உள்ள நான்கு அணைகளிலும் நீர்வரத்து போதுமானதாக இருந்த போதிலும் நீர் திறக்கவில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்கக் கர்நாடகா அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினார்.



